2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 14/03/2016

Princiya Dixci   / 2016 மார்ச் 14 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயற்கை வனப்பை இரசிப்பதனால் ஏற்படும் நெஞ்சத்துப் புளகாங்கிதம், நாங்கள் ஈட்டும் செல்வங்களை விட மதிப்பார்ந்ததாக அமையும்.

வனப்புடன் கூடிய இயற்கையின் விசாலத்தை மனிதனால் உருவாக்கிவிட முடியாது. எங்களால் செய்ய முடியாத இவற்றை எந்தவிதமான சிரமமுன்றி விழிகளால் நோக்குவதும் தேகத்தினால் ஸ்பரிப்பதும் மிகவும் விலை சொல்ல முடியாத ஒன்றல்லவா.

ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள், இந்தப் படைப்புக்கள் இல்லாது  விடில், ஒரு நொடிப் பொழுதில் சிரசு சிதறிவிடும் உணர்வை மனிதர் அடைந்து விடுவார்கள்.

இரசனையின் ஊடாக, பரந்த உலகின் உயிர்த்துடிப்புடனான அழகை மட்டுமல்ல, அதிசய வடிவங்களையும் உள்ளத்தினுள் எடுத்துக்கொள்கின்றோம்.

சொர்க்கத்தை எங்கள் முன்னாலேயே பார்க்கும் புதுமையை, வாழும்போதே அனுபவியுங்கள் அன்பர்களே.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .