Princiya Dixci / 2016 மார்ச் 17 , மு.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொல்லாதவனாக வாழ்தல் கூடாது. ஆனால், சில சமயங்களில் பொல்லாதவன்போல நடிக்க வேண்டியுள்ளது. இல்லாதுவிடின் இந்த சமூகத்தில் சிலர் பலரை வேண்டுமென்றே அடக்கி ஒடுக்க முனைவதைத் தடுக்க வேண்டுமல்லவா?
ஒருவர் மிடுக்குடன் நடப்பது, ஆணவத்தின் வடிவமாக இருத்தலாகாது. மிடுக்கு ஆண்களுக்கான அழகு என்பார்கள். ஏன்! பெண்கள் மென்மைப்போக்குள்ளவர்களேயாயினும் மிடுக்குடன் இருப்பதும் அவளுக்கு அது பாதுகாப்பான நிலைதான்.
எழுத்தாளர்கள், தலைவர்கள், பத்திரிகையாளர்களுக்கு ஆளுமையிருந்தும், மிடுக்கும் துணிவுமின்றி இருக்கக்கூடாது. இது மமதை அல்ல.
இன்று இருக்கும் செல்வம் நாளைக்கு அது இல்லை. ஆயினும், பணம் படைத்தவர்களில் சிலர் காட்டும் தோரணை அர்த்தம் அற்றது.
இப்படியிருக்கையில், புலமையாளர், அறிஞர்கள் சோர்வுடன் ஒதுங்கி நின்றால், தங்களது ஆற்றல்களுக்கு அவர்களே கௌரவம் கொடுக்கத் தவறியதாகத் தோற்றம் காட்டும். அஞ்சா நெஞ்சமே அறிஞர்களுக்கு அழகு.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .