Princiya Dixci / 2016 மார்ச் 18 , மு.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய தினம் படங்களில் பெரும்பாலும் அடி, தடி, அராஜகம் செய்பவர்களைத் தலைவனாகச் சித்திரித்துக் காட்டுகின்றார்கள்.
இதனைப்பார்க்கும் இளைஞர் கூட்டம், ஒருவன், மக்களிடம் செல்வாக்குப் பெற்றுக்கொள்ள சண்டித்தனமே மேலானது எனக் கருதியும் விடுகின்றனர்.
வீரத்தை இரசனையற்றதாக்கி விட்டார்கள். வீரம் மெச்சத்தக்கது. அதற்காகப் பிறருடன் மோதக் கூடாது. பிரபலமாவதற்குச் சண்டித்தனம் உதவாது. இந்த அகங்கார உணர்வு எத்தனை காலத்துக்கு உதவப்போகின்றது?
சாத்வீகம் என்பது எதுவெனப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள். இதனால்தான் ஒருவன் மன வலிமையும் உடல் வலிமையும் பெற்ற மாவீரனாவான்.
உலகத்துக்காகத் தன்னை அர்ப்பணிப்பவனே வீரன். மக்களின் ஒருவனாக அவர்களுக்குத் தோள் கொடுப்பவனே திறன் மிகு கொடையாளியான மாவீரன்.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .