Princiya Dixci / 2016 மார்ச் 29 , மு.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊக்கமில்லாதவர்கள் எதற்கும் ஆசைப்படுவதில் அர்த்தமேயில்லை. மனசு ஸ்திரமற்றவர்களுக்கு எங்ஙனம் ஊக்கம் பெறமுடியாது. செய் தொழிலில் லயிப்பு உண்டாக வேண்டும்.
பொருள்தேட ஆசைப்படுபவர்கள் உறங்கக் கூடாது. அடுத்தவன் செல்வந்தனாக இருக்கின்றானே, என்னால் முடியவில்லை என வருத்தப்படும் இத்தகையவர்கள் ஏன் நான் இப்படி இருக்கின்றேன் என ஒரு கணமாவது ஆழமாகச் சிந்தித்தால் இந்நிலைவருமா?
ஊக்கமின்மையும் ஒரு கோழைத்தனத்தின் வடிவம் தான். உழைக்கும் திறன் உடையோர் சோம்பலாக இருப்பது என்ன நியாயம் ஐயா.
வாழ்நாளில் எல்லைக்குள் சுறு சுறுப்பையினையே மூலதனமாகக் கொண்டு இயங்குக. காலத்தைக் கருத்தில் நிறுத்தி அதன் பெறுமதியை உயர்த்துக. எல்லாமே கிடைக்க நன்றாக இயங்குக.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .