2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

வாழ்வியல் தரிசனம் 12/04/2016

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 12 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கவலை தொட்டதால் குடியினை தொட்டேன் என்கிறார்கள். குடியினைப் பற்றியதால் அவர் தம் உடல் நிலை கவலைக்கிடமாகப் போகின்றது என்பதை உணர்கின்றார்கள் இல்லையே.
                                                
மயக்கத்தில் வாழ்வதற்குச் சிலர் விரும்புகின்றார்கள். சொந்த நிலையில் சுயாதீன சிந்தனையில் இருப்பதே தங்களுக்குக் கேடு என வியாக்கியானத்தைக் குடிகாரர் சொல்வது நகைப்புக்கிடமானது.

மது போதைபோல் புனிதமான மன அமைதி வேறு ஏது எனப் பிதற்றுபவர்கள், சுய உணர்வு வந்தால் தங்கள் சுதந்திரம் பறிபோகும் எனவும் கருதத் தலைப்படுகின்றார்கள்.

அதாவது, போதையில் எதனையும் செய்யலாம், பேசலாம் எனத் திட்டமிட்டு மது அருந்துபவர்கள் ஏராளம் பேர் உளர்.

தன்னைத்தான் பழி வாங்குவதே மது குடிப்பவர்கள் செல்லும் வழியாகும். குடிகாரன் கடவுளுக்கும் சவால் விடுவான்.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .