2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 22/04/2016

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 22 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேங்கையையும் அரியையும் வீழ்த்தும் வலிமை பெற்ற நான், எங்கனம் இந்த அரியிடம் வீழ்ந்து பட்டேன் என ஒரு மாவீரன் சந்தோஷத்துடன், தனது நண்பரிடத்தே கவலைப்பட்டான்.

காதல் என்பது, எவரின் நெஞ்சத்தையும் அடைத்திடவல்லது. சிலிர்ப்பூட்டலையும் தொட்டு உணரும் முன்னரே நயனங்கள் மூலம் ஸ்பரிக்கும் உணர்வையும் சித்து வேலைகளை மிக நுட்பமாகச் செய்வதே இதன் வேலை.

சொல்லப்போனால், நல்ல காதலைப் பெறுவது கூட அவரவர் அதிர்;ஷ்டம் தான். ஆனால், பெரியவர்களால் செய்விக்கப்பட்ட திருமணத்தைச் செய்து கொண்டவர்களும் இந்த சுகானுபவத்தைப் பெற்ற வண்ணமே இருக்கின்றார்கள். கணவன், மனைவி உறவு அத்துணை பவித்திரமானது.

நல்ல காதலைப் பெற்றவர்கள் இறுப்பூதெய்துவதும் இறுமாப்படைவதும் யதார்த்தமானதே. இதயத்தினுள் புனலையும் அனலையும் களிப்பையும் அளிக்கும் காதல், இறைவனின் அற்புத அன்பளிப்பு.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .