Princiya Dixci / 2016 மே 04 , மு.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது வாழ்க்கைக்கு, தானே கதாநாயகன் என்கின்ற உரிமையையும் தனித்துவத்தையும் ஒருபொழுதும் விட்டுக்கொடுக்கலாகாது. தனது சுய ஆளுமையில் நம்பிக்கை வைக்காதவர்களே, பிறரிடம் தங்களை ஒப்படைத்துவிட்டு சுயமாக முடிவெடுக்கும் திறனை இழந்தவர்களாகின்றனர்.
தனது திறனில் நம்பிக்கைகொண்டு இயங்குவது, வீம்போ அல்லது கர்வம் கொண்டதாகவோ கருதல் ஆகாது.
ஆயினும், தன்னிடம் உண்மையான அக்கறை கொண்டோரிடம் ஆலோசனைகளைக் கேட்பதில் தவறு கிடையாது.
எந்தவிதமான சுய சிந்தனையின்றி நடந்துகொள்வதே மகா தவறாகும். பெரியோர்களின் அறிவுரையினைக் கேட்காமலும் மனம்போன படி வாழலாகாது.
தனக்கும் ஒரு வாழ்க்கையை இறைவன் அளித்துள்ளான் என்ற இறுமாப்புடன், படைப்பின் நோக்கத்தை உணர்ந்து நடப்பவனே உண்மையான மனிதனாவான்.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .