2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

'கங்கையினில் நீந்திய படியே தண்ணீர் தேடும் மாந்தர் கூட்டம்'

Princiya Dixci   / 2016 ஜூலை 01 , மு.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்பக தருவைக் கொடுத்தாலும் சிலர் திருப்திப்படமாட்டார்கள். இறைவன், கற்பக தரு போல் கேட்டதை வழங்குவார்.

மனிதருக்கு மிகையான ஆசைகள் கூடும் போது, கேட்டவரம் தரும் கடவுளை நம்பாது, அற்ப வழங்கல்களுக்காக யார் எவரோ என அறியாது அவர்கள் பின்னே ஓடுவார்கள். இவையெல்லாமே கொஞ்ச நாட்களுக்குத்தான். அப்புறம் மீண்டும், மீண்டும் எதனையோ தேடுகின்றனர்.

கங்கையினில் நீந்திய படியே  தண்ணீர் தேடும் மாந்தர் கூட்டம். எதனைக்கொடுத்தால் இவர்கள் மனம் நிறைவு கொள்வார்கள். ஆரம்பத்தில் எதுகிடைத்தாலும் ஏற்கும் சனங்கள், அப்புறம் நிறையின்றி இறைவனைக் குறை கூறுகின்றமை இயல்பாகிவிட்டது.

சந்தோஷங்களைப் புற உலகிலிருந்து தேடாமல், அகத்தினும் அமிர்தமாய் இருப்பதை அள்ளியெடுங்கள்.

வாழ்வியல் தரிசனம் 01/07/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .