2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

‘பக்திக்குள் எல்லாமே அடக்கம்’

Princiya Dixci   / 2017 மே 11 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாபெரும் விஸ்வரூபியான இறைவன் இந்தச் சின்ன இதயத்துக்குள் எப்படி நுழைந்தான்? பக்திக்குள் எல்லாமே அடக்கம். பவித்திரமான அன்பு மேவிய பக்தி, பல சாதனைகளைப் புரிந்த வண்ணமாய்த் துலங்குகின்றது; உலகத்தை, உங்களை நோக்கி வரச் செய்கின்றது; கருமங்களை இலகுபடுத்துகின்றது. 

கடவுள் பக்தியுள்ளவர்கள், சாமியார்களாகத்தான் இருக்க ​வேண்டும் என்பதில்லை. இல்வாழ்க்கையில் புகுந்து அறவாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு ஈகைக்குணம் இருந்தால் மிகவும் எளிதாகவே கடவுளின் கடாட்சம் வந்தெய்திவிடுகின்றது. 

இருப்பதைக் கொடுப்பவனுக்கு எதுவுமே பெரியது என்று ஒன்றுமில்லை. எனவே தெய்வம் தானாகவே அவன் உள்ளத்தில் குடிகொண்டு விடுகின்றது. 

தானும் தான் சார்ந்த உலகமும் உய்ந்து உய்ய வேண்டும் என எவர் கரிசனை காட்டினாலும் பரந்த பூமியில் நிரந்தர அமைதியுடன் வாழ்ந்திடுவார்கள். 

பற்று அற்ற இறைவனும் பக்தனை விரும்புகின்றான்.

வாழ்வியல் தரிசனம் 11/05/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X