Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஜூலை 15 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கவிதா சுப்ரமணியம்
மனிதன் சுகத்தை மட்டுமே விரும்புகின்றான். ஏனெனில் அவனுக்கென ஒரு கஷ்டம் வரும் போது அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் மனிதன் அங்கலாய்த்துக்கொண்டிருப்பான். இயற்கையும் தான் தினமும் வணங்கும் கடவுளும் தன்னை கஷ்டப்படுத்துகிறான் என்பதே எல்லா மனிதர்களினதும் எண்ணமாக உள்ளது.
கஷ்டம் வரும் போது 'இதுவும் கடந்து போகும்' என்று எண்ணுபவர்களை விட இறைவன் என்னை சோதிக்கின்றான் என்று எண்ணுபவர்களே அதிகம்.
கஷ்டங்களை அனுபவிக்கும் போது என்ன கொடுமை சரவணா? என்று நொந்துக்கொள்பவர்கள் வளர்ச்சியடையும் போது ஏன் இந்த வளர்ச்சி சரவணா? என்று கேட்பதில்லை.
என்னிடம் இந்த கார் இருக்கின்றது, இந்த அலைபேசி இருக்கின்றது, இப்படியொரு வீடு இருக்கின்றது, இவ்வளவு நகை இருக்கின்றது, நான் அங்கே செல்கின்றேன் இங்கே செல்கின்றேன் என்று பெருமிதம் கொள்பவர்கள்; கஷ்டம் வந்தால் மட்டும் எனக்கு மட்டும்தான் எல்லாம் நடக்கும் என்பார்கள். இதற்கூடாக மனிதன் கஷ்டத்தை ஏற்க மறுக்கின்றான் என்பது புலனாகிறது.
'நல்லவர்களை கடவுள் சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான்' என்ற வசனம் அனைவரினது உள்மனதிலும் இருந்தால் இவ்வாறான அனுபவங்கள் சிறப்பிக்க வைக்குமே தவிற கசப்பிக்காது.
பிறந்த நொடியிலிருந்து சந்தோஷமாகவும் வசதி வாய்ப்புடனும் மாத்திரம் வாழ்ந்து செத்து மடிந்தவர்கள் எவரும் கிடையாது. அதேபோல கஷ்டத்தையும் கண்ணீரையும் மாத்திரம் அனுபவித்து வாழ்ந்தவனும் எங்கும் கிடையாது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
மிருகங்களை விட மனிதர்கள் கேவலமானவர்கள் என்று அனைவரும் கூறுவதுண்டு. ஆனால் மனிதனுடன் ஒப்பிடுகையில் மிருகங்கள் எந்தவொரு பாவத்தையும் செய்வதில்லை. ஒரு நாளைக்கு மனிதன் 9 புண்ணியங்களை செய்தால் 90 பாவங்களை செய்கின்றான்.
பாவங்களை செய்யவேண்டுமா என்று யோசித்து பாருங்கள். அந்த பாவத்தை செய்வதால் நமக்கு நன்மை கிட்டும் என்று எண்ணினால் அது தவறு. ஏனெனில் நல்லது நடப்பதற்காக பாவம் செய்கின்றோம் என்று எண்ணி அதை செய்தால் அதனால் ஏற்படும் கர்ம வினை ஜென்மம் முடியும் வரை நம்மை தொடரும் என்பதை அறிந்திருக்கவேண்டும்.
பிரச்சினைகளை கண்டு சோர்ந்து விடக்கூடாது. முயற்சி செய்யுங்கள். உங்களது அனைத்து முயற்சிகளும் தீர்ந்து போகும்பட்சத்தில் கடவுளின் கருணை தொடங்கும். அதற்கு இந்த 7 வழிகளை கடைபிடியுங்கள்
1. எப்போதும் செயற்றிறனுடன் செயற்படுங்கள். உங்கள் வாழ்க்கையில் எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் நீங்களே சாட்சி, நீங்களே பொறுப்பு என்று உறுதிகொள்ளுங்கள். எப்போதும் உயிர்ப்புடன் செயற்படுங்கள். இது உங்களை முன்னோக்கி பயணிக்க வைக்க உதவும்;.
2. உங்களது வாழ்க்கையில் நீங்கள் என்னவாக நினைக்கின்றீர்கள் என்று ஒரு முடிவு எடுக்கும் முன்னர் ஒரு திட்டத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். எடுக்கும் முடிவு இறுதியில் சரியானதாக முடியும் என்று நம்பிக்கை வையுங்கள. அப்படி நம்பிக்கை இல்லாவிட்டால் திட்டத்தை மாற்றுங்கள். எப்போதும் தளர்ந்து போகாது திட்டங்களை முன்னெடுங்கள்.
3. நீங்கள் முதலில் செய்யவேண்டும் என்று நினைக்கும் அல்லது கட்டாயம் செய்யவேண்டும் என்ற விடயத்தை முன்தள்ளிப்போடுங்கள். பின்தள்ளிப்போட்டால் வாழ்க்கை தாழ்வடையும். உதாரணத்துக்கு இன்று ஒரு மணித்தியாலம் தூங்கி எழும்பலாம் என்று நினைத்தாலும் அந்த ஒரு மணித்தியாலத்தில் செய்யவேண்டிய முக்கியமான வேலை பின்தள்ளிப்போகும். அதற்கு இடமளிக்காதீர்கள்.
4. அனைவரும் வெற்றியடையவேண்டும் என்று எண்ணுங்கள். யாராலும் இந்த வேலையை செய்யமுடியும் என்று எண்ணுங்கள். ஒரு வேலையை அனைவரும் பகிர்ந்து செய்தால் சிறிய நேரத்தில் பெரிய சாதனையை செய்யலாம். யாரையும் ஒதுக்கி வைக்காதீர்கள். கூட்டாக சேர்ந்து முயற்சித்தால் அனுபவமும் அதிகரிக்கும்.
5. ஒருவிடயத்தை பற்றி மற்றையவர்கள் மத்தியிலோ அல்லது ஒரு தனிநபரிடமோ பேசுவதற்கு முன்னர், எதிரில் இருப்போர் அல்லது இருப்பவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்று செவிமடுங்கள். செவிமடுத்த பின்னர் உங்களுடைய எண்ணத்தை வெளிப்படுத்துங்கள். இதன்மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ளமுடியும்.
6. ஒன்றிணையுங்கள். ஒருவரை பற்றி மற்றொருவர் கேலி கூறினாலோ குறை கூறினாலோ காது கொடுக்காதீர்கள். முடிந்தால் தனிப்பட்ட நபர் பற்றி பேசும் போது கதைக்குரியவர் இல்லாதபோது அவரை பற்றி பேச வேண்டாம் என்று கூறுங்கள். முடிந்தளவு நல்லதை நினையுங்கள. முடியாவிடின் உங்களுக்கென்று சில கட்டுப்பாடுகளை வைத்துக்கொள்ளுங்கள். அனைவருடனும் ஒன்றாக இருக்க முயற்சியுங்கள்.
7. உங்களது எண்ணங்களை கூர்மைப்படுத்துங்கள். அனைவரும் சமமானவர்கள் என்று உணருங்கள். ஏழை, பணக்காரன், சாதி, மதம் என்று பார்க்காதீர்கள். அவ்வாறு செய்பவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள். கேட்காவிடின் அவர் போக்கில் விட்டுவிடுங்கள். வாழ்க்கையை சமநிலையாக பராமரியுங்கள்.
14 minute ago
21 minute ago
26 minute ago
46 minute ago
j.johnson Saturday, 19 September 2015 04:36 AM
those are words suitably to life,
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
21 minute ago
26 minute ago
46 minute ago