2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ரொனி கிரெய்க்கின் நலம் வேண்டி பிரார்த்தனை

Menaka Mookandi   / 2012 நவம்பர் 24 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற கிரிக்கெட் நேர்முக வர்ணனையாளர் ரொனி கிரெய்க் குணமடைய வேண்டி பூஜையொன்று நடத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இந்தப் பூஜை இடம்பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரான ரொனி கிரெய்க்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டிருப்பதாக கடந்த ஒக்ரோபர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.

இலங்கையில் இடம்பெற்றிருந்த உலக டுவென்டி டுவென்டி தொடரின் பின்னர் அவர் அவுஸ்ரேலியாவிற்குத் திரும்பியிருந்த போதே கிரெய்க் இன் புற்றுநோய் பற்றிக் கண்டுபிடிக்கப்பட்டது.

தென்னாபிரிக்காவில் பிறந்த ரொனி கிரெய்க், இங்கிலாந்து சார்பாகப் போட்டிகளில் பங்குபற்றியதோடு, இலங்கையோடு நெருக்கமான தொடர்புகளைப் பேணும் ஒருவராவார்.

இலங்கையின் சுற்றுலாத்துறையின் தூதுவராகச் செயற்படும் அவர், நேர்முக வர்ணனைகளில் இலங்கையின் இளநீர்களைப் பிரபலப்படுத்துவதன் மூலம் அதிகமாக அறியப்படுபவர்.

இதன் காரணமாக இலங்கையிலிருந்து அவருக்கான ஆதரவு அதிகமாகக் காணப்பட்டிருந்தது, இந்நிலையிலேயே நேற்றைய தினம் அவரது நலம் வேண்டி பூஜை நடாத்தப்பட்டுள்ளது.

கொழும்பு கங்காராமை விகாரையில் இடம்பெற்ற இந்தப் பூஜை நிகழ்வில் இலங்கை அணியின் வீரர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், நேர்முக வர்ணனையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு ரொனி கிரெய்க் விரைவில் குணமடைய பிரார்த்தனை மேற்கொண்டிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X