2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

பாடகி நித்யஸ்ரீ தம்பதி தற்கொலை முயற்சி: கணவன் உயிரிழப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 20 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன்  தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை அறிந்து நித்யஸ்ரீயும் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரபல பின்னணிப் பாடகி டி.கே.பட்டம்மாளின் பேத்தியான நித்யஸ்ரீ கர்நாடக இசைப் பாடகி ஆவார். இவர் பெரும்பாலான திரைப்படங்களில் பின்னணி பாடியுள்ளார்.

இவரது கணவர் மகாதேவன் இன்று காலையில் சென்னை கோட்டூர் பகுதியில் வைத்து தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனை கேள்வியுற்ற நித்யஸ்ரீ வீட்டில் வைத்து தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் அவரை அவரது உறவினர்கள் காப்பாற்றி உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச் சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (தட்ஸ்தமிழ்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X