Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 மார்ச் 13 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் முரளியின் தந்தையும் பழம்பெரும் கன்னட சினிமா இயக்குநருமான எஸ்.சித்தலிங்கய்யா, தனது 79 ஆவது வயதில் பெங்களூரில் உள்ள வைத்தியசாலையில் நேற்று காலமானார்.
பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர் இதுவரை 'மேயர் முத்தண்ணா', 'பங்காரத மனுஷ்ய' 'பூதய்யனு மக அய்யு' உள்ளிட்ட பல கன்னட வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.
இவரது இயக்கத்தில், நடிகர் ராஜ்குமார் நடித்திருந்த சமூக விழிப்புணர்வு கதையம்சம் கொண்ட 'பங்காரத மனுஷ்ய' படம் பெங்களூர் திரையரங்கில் தொடர்ந்து 2 ஆண்டுகள் ஓடி மிகப்பெரிய சாதனை படைத்தது. இதேவேளை, இவர் தமிழ்ப் படம் ஒன்றையும் இயக்கியுள்ளார்.
'புட்டண்ண கனகல' விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவரது இயக்கத்தில், நடிகர் ராஜ்குமார் நடித்திருந்த சமூக விழிப்புணர்வு கதையம்சம் கொண்ட 'பங்காரத மனுஷ்ய' படம் பெங்களூரில் ஒரு திரையரங்கில் தொடர்ந்து 2 ஆண்டுகள் ஓடி மிகப்பெரிய சாதனை படைத்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .