2025 செப்டெம்பர் 08, திங்கட்கிழமை

முதுபெரும் எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்

Kanagaraj   / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் இலக்கிய உலகின் முதுபெரும் எழுத்தாளர் 'ஞானபீட' விருது பெற்ற ஜெயகாந்தன் சென்னையில் நேற்று காலமானார். தமிழ் இலக்கிய உலகின் முன்னோடி ஆளுமைகளில் முதன்மையானவர் ஜெயகாந்தன். சிறுகதைகள், புதினங்கள், திரைப்படங்கள் என பன்முக ஆளுமை கொண்டவர்.

1934ஆம் ஆண்டு கடலூரில் பிறந்தவர். பின்னர் இளம்வயதில் சென்னைக்கு குடியேறிய அவர் தீவிர இடதுசாரியாக செயல்பட்டார். 1950-60களில் தி.மு.க. போன்ற எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். 

பல்வேறு பத்திரிகைகளில் ஜெயகாந்தன் படைப்புகள் வெளியாகி பெரும் அங்கீகாரத்தை தேடித் தந்தன. உன்னைப் போல் ஒருவன், சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற ஜெயகாந்தனின் நாவல்கள் திரைப்படங்களாகின. 

உயரிய இலக்கிய விருதான 'ஞானபீட' விருது பெற்றவர் ஜெயகாந்தன். கடந்த சில ஆண்டுகளாக முதுமையால் எழுதுவதை நிறுத்தியிருந்தார் ஜெயகாந்தன். சென்னையில் நேற்று இரவு உடல்நலக் குறைவால் ஜெயகாந்தன் காலமானார். அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பாகும். 


  Comments - 0

  • ss.sharma Thursday, 18 June 2015 05:58 PM

    very sad old gold library for Tamil litterer

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X