2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஆண்களுக்கும் கருத்தடை மாத்திரையை கண்டுபிடிச்சாச்சு?

Editorial   / 2025 ஓகஸ்ட் 20 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகம் தோன்றிய காலம் முதலே பெண்கள் அனைத்து நாடுகளிலும், சமூகங்களிலும் இரண்டாம் நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளனர். ஆண்களின் வேலை சம்பாதிப்பது மட்டுமே, குடும்ப பொறுப்பு, குழந்தை வளர்ப்பு, வீட்டுப்பணி என அனைத்துமே பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. குடும்பத்தை வளர்ப்பது முதல் குடும்பக் கட்டுப்பாடு வரை அனைத்தையும் பெண்களே சுமக்க வேண்டும்

பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு முதல் முதலாக ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை இப்போதுதான் தயாரிக்கப்பட்டள்ளது. YCT-529 என்று அழைக்கப்படும் இந்த மாத்திரை அதன் முதல் மனித பாதுகாப்பு சோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளது.

YCT-529 என்றால் என்ன, அது ஆண்கள் உடலில் எவ்வாறு செயல்படும்? எந்த வகை ஹார்மோன்களும் இல்லாத YCT-529 என்ற கருத்தடை மாத்திரை, விலங்கு பரிசோதனையில் ஏற்கனவே நேர்மறையான முடிவுகளை எட்டியுள்ளது, இந்த மாத்திரை எலிகளில் பரிசோதிக்கப்பட்டபோது 99 சதவீத கர்ப்பங்களைத் தடுக்கிறது. இதுபற்றிய கூடுதல் ஆய்வுகள் தேவை என்றாலும், ஆரம்பகால சோதனையில் கிடைத்துள்ள இந்த நம்பிக்கைக்குரிய வெற்றி, மாத்திரை விரைவில் ஆண்களுக்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள பிறப்பு கட்டுப்பாட்டு விருப்பமாக மாறலாம் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. ஹார்மோன் இல்லாத கருத்தடை மாத்திரையான YCT-529, விந்தணுக்களுக்குள் வைட்டமின் A அணுகலைத் தடுப்பதன் மூலம் செயல்படுகிறது, இதனால் விந்து உற்பத்தியாகாமல் தடுக்கிறது. மேலும், இது டெஸ்டோஸ்டிரோன் அளவைப் பாதிக்காது. குறிப்பாக, இந்த மாத்திரை எடுத்துக் கொள்ளும்போது ஆண்களின் லிபிடோ பாதிக்கப்படாது.

2030-ன் இறுதிக்குள் ஆண் கருத்தடை மாத்திரை பொதுமக்களின் கைகளுக்கு கிடைக்கும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள், தற்போது மனிதர்களில் பரிசோதிக்கப்படும் ஒரே கருத்தடை மாத்திரை இதுதான். சமீபத்திய சோதனையில், ஆராய்ச்சியாளர்கள் 16 ஆண்களை தேர்ந்தெடுத்து, பின்னர் பல நாட்களாக அவர்களுக்கு மாத்திரைகளின் வெவ்வேறு அளவுகளை வழங்கினர். "ஏதேனும் பக்க விளைவுகள் உள்ளதா என்பதைக் கண்டறிவதே இதன் நோக்கமாக இருந்தது" என்று ஊடக அறிக்கைகள் கூறுகிறது.

  Comments - 0

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X