2025 ஜனவரி 25, சனிக்கிழமை

ஊட்டியில் சாக்லேட் திருவிழா

Editorial   / 2024 டிசெம்பர் 22 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊட்டி வரக்கூடிய சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் சாக்லேட் திருவிழா   துவங்கியது. இதில் நீலகிரிக்கே உரித்தான உற்பத்தி பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்ட சாக்லேட்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஐரோப்பியர்கள் ஊட்டியில் வாழ்ந்தபோது அவர்களின் பாரம்பரிய கலாசாரத்தையும், உணவு முறைகளையும் இங்கு அறிமுகப்படுத்தினர். தற்போது ஊட்டியில் தயாரிக்கப்படும் ேஹாம்மேட் சாக்லேட்களுக்கு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்கள் மத்தியிலும் நல்லமவுசு உள்ளது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் வகையில் ஊட்டியில் உள்ள தனியார் சாக்லேட் அருங்காட்சியகத்தில் 15வது ஆண்டு சாக்லேட் திருவிழா தொடங்கியது.

இதில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஊட்டியில் உள்ள பழமை வாய்ந்த கட்டிடமான பிரீக்ஸ் பள்ளி கட்டிடத்தின் 150வது ஆண்டை சிறப்பிக்கும் வகையில் 100 பிரிமீயம் சாக்லேட்டுகளை பயன்படுத்தி கட்டிடத்தின் வடிவம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஊட்டியின் பல்வேறு தயாரிப்புகள் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் பீட்ரூட், கேரட், உருளைக்கிழங்கு, யூகலிப்டஸ் ஆயில், ஊட்டி வர்க்கி, மிளகு, கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய், ரோஜா இதழ்கள், புளூபெர்ரி, மல்பெரி, பிளாக்பெரி, கஸ்டர்ட் ஆப்பிள், டிராகன் பழம், மாம்பழம், ஆரஞ்சு, பேஷன் புரூட் உள்ளிட்ட சுவையை பிரதிபலிக்கும் வகையில் ஹோம் மேட் சாக்லேட்கள் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

மேலும் சாக்லேட்களை கொண்டு 3 இளம்பெண்களின் உருவம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது பார்வையாளர்களை கவர்ந்தது. டார்க் சாக்லேட், ஜிஞ்சர் பில்லிங் சாக்லேட், பெப்பர் ஹனி சாக்லேட், கேசர் பிஸ்தா, தேங்காய் வெல்லம் பால் சாக்லேட், மெக்சிகன் சாக்லேட் உட்பட 500 வகையான சாக்லேட்டுகள் கண்காட்சியில் இடம்பெற்று உள்ளன. இவற்றை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பது மட்டுமின்றி, சாக்லேட்களையும் வாங்கி சென்றனர். ஜனவரி 5ம் தேதி வரை 17 நாட்கள் இந்த சாக்லேட் திருவிழா நடைபெற உள்ளது என நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X