Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
George / 2016 ஜூலை 25 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் முதல் முறையாக கருவில் இருக்கும் 24 வார குழந்தைக்கு சத்திரசிகிச்சை செய்து வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கருவுற்ற பெண் ஒருவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவரது வயிற்றில் இருந்த 24 வார குழந்தை, ஸ்பைனா பிபிடா (Spina bifida) என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஸ்பைனா பிபிடா என்பது முதுகு தண்டுவடத்தை சுற்றிய எலும்புகள் சரியாக வளர்ச்சி அடையாத நிலை ஆகும். இந்த நோய் அவுஸ்திரேலியாவில் மிக அரிதான ஒன்றாகும்.
கருவுற்ற பெண்ணுக்கு மயக்க மருந்து அளித்து, அப்பெண்ணின் கருப்பை உடலில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது. பின்னர் கருப்பைக்குள் சில திரவங்களை உட்செலுத்தி உள்ளனர்.
இதனால் கருப்பையின் மேற்பகுதிக்கு வந்த குழந்தையில் உடலை திருப்பி, அதன் முதுகு தண்டுவட பகுதியில் சத்திரசிகிச்சை செய்துள்ளனர். பின்னர் கருப்பையை மீண்டும் அப்பெண்ணின் உடலில் வைத்து தைத்துள்ளனர்.
அமெரிக்க நிபுணர்கள் குழுவின் உதவியுடன் சுமார் 40 பேர் கொண்ட அவுஸ்திரேலிய வைத்தியர்கள் குழு இதனை செய்து முடித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
17 minute ago
35 minute ago