Sudharshini / 2015 மார்ச் 18 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொதிக்கும் எண்ணெய் லேசாக உடம்பில் பட்டாலே துடித்துப் போய்விடுவோம். ஆனால் ஒரு புத்ததுறவியோ கொதிக்கும் எண்ணெயில் கூலாக அமர்ந்து தியானம் செய்கிறார். இந்த துறவியை அதிசய பிறவியாக மக்கள் போற்றுகின்றனர்.
தாய்லாந்தின் லம்பு மாகாணத்தைச் சேர்ந்த நாங் புவா என்ற புத்த துறவி, அந்த பகுதியில் மிக சக்தி வாய்ந்த துறவியாக கருதப்படுகிறார். இவர் தனது கைகளால் தொடும் பொருட்கள் அனைத்தும் சக்தி வாய்ந்தவையாக மாறுகின்றன என அப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது. அத்துடன் அவை அதிக விலைக்கும் விற்கப்படுகிறன.
அதனால் அவரை பின்பற்றுபவர்கள் தாயத்துக்கள் அல்லது துணி துண்டுகளை அவரின் கையால் தொட்டு கொடுக்க எடுத்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் நாங் புவா, சில நாட்களுக்கு முன் பெரிய பாத்திரம் முழுவதும் எண்ணெயை நிரப்பி அதை கொதிக்க வைத்து அதில் அமர்ந்து தியானம் செய்தார். அடிப்பகுதியில் தீ நன்கு கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்துள்ளது.
தீ மூட்டுவதற்கு முன்பாக, பெரிய பாத்திரத்தை வைத்து அதில் மணல் போன்ற ஒன்றினை கொட்டுகிறார்கள். பின்னர் வாழை இலை பரப்பி அதன் மீது எண்ணெய் ஊற்றுகின்றனர்.
அந்த எண்ணெய் பாத்திரத்தில் துறவி ஏறி அமர்ந்து கொண்ட உடன், கீழே விறகுகளை அடுக்கிவைத்து தீ மூட்டிவிட்டனர். கொளுந்து விட்டு எரியும் தீயில் எண்ணெய் கொதிக்கத் தொடங்குகிறது. ஆனாலும் துறவி தொடர்ந்து தியானத்தில் அமர்ந்து இருந்தார்.
இறுதியில் துறவி அமர்ந்து தியானம் செய்த எண்ணெயை பிரசாதம் போல போத்தல்களில் அடைத்து பெற்றுச் சென்றுள்ளனர் பக்தர்கள்.
எண்ணெயில் அமர்ந்து தியானம் செய்த காட்சி காணாளியாக எடுக்கபட்டு இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்தாலும் இதுவொரு தந்திர வேலை என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
11 minute ago
42 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
42 minute ago
47 minute ago
1 hours ago