2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

சடலத்தை பதப்படுத்தி பல ஆண்டுகள் கழித்து இறுதிச்சடங்கு

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 14 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்​தோ​னேசி​யா​வில் உள்ள டரோஜா பழங்​குடி​யினர் இறந்​தவர்​களின் உடலை பதப்​படுத்தி பாது​காத்து பல ஆண்டு கழித்து அதிக செல​வில் கொண்​டாட்​டத்​துடன் இறுதிச் சடங்கை நடத்​துகின்​றனர்.

உலகின் பல பகு​தி​களில் இறந்​தவர்​களின் உடல்​கள் அடக்​கம் செய்​யப்​படும் அல்​லது தகனம் செய்​யப்​படும். ஆனால், இந்​தோ​னேசி​யா​வில் உள்ள டரோஜா பழங்​குடி​யினர், தங்​கள் குடும்​பத்​தில் இறப்​பவர்​களின் உடலை பதப்​படுத்தி வைத்து அவர்​களு​டன் வாழ்​கின்​றனர்.

இந்​தோ​னேசி​யா​வின் தெற்கு சுலவேசி பகு​தி​யில் உள்ள டனா டரோஜா பகு​தி​யில் இந்த வினோத வழக்​கம் உள்​ளது. இறப்பு என்​பது மற்​றொரு மிகப் பெரிய பயணம் என அவர்​கள் நம்​பு​கின்​றனர்.

இப்​பகு​திக்கு சென்​றால் அங்​குள்ள பழங்​குடி​யினர், இறந்​தவர்​களின் உடல்​களை பதப்​படுத்தி அவற்றை டாங்​கோனன் என்ற இடத்​தில் வைத்து அவர்​களு​டன் வாழ்​கின்​றனர்.

இறந்​தவர்​களின் உடல்​களு​டன் அவ்​வப்​போது பேசுகின்​றனர். அவற்​றுக்கு உணவும் படைக்​கின்​றனர். இரண்டு ஆண்​டு​களுக்கு ஒரு முறை பதப்​படுத்​தப்​பட்ட உடலை சுத்​தம் செய்து அவற்​றுக்கு புத்​தாடை​யும் அணி​வித்​து, தங்​கள் குடும்​பத்​தில் புதி​தாக பிறப்​பவர்​களிடம் அறி​முகம் செய்​கின்​றனர்.

பதப்​படுத்​தப்​பட்ட அந்த உடல்​கள் தலை​முடி மற்​றும் வாயில் பற்​களு​டன் காய்ந்த நிலை​யில் உள்​ளன. சிலரது உடல்​கள், அவர்​களின் வாழ்க்​கைத் துணை இறக்​கும் வரை பாது​காக்​கப்​படு​கின்​றன.

பல ஆண்​டு​கள் கழித்து இந்த உடல்​களுக்கு அதிக பொருட் செல​வில் கொண்​டாட்​டத்​துடன் இறு​திச் சடங்​கு​கள் 5 நாட்​களுக்கு நடத்​தப்​படு​கிறது. அப்​போது எரு​மை, பன்​றிகள் பலி​யிடப்​பட்டு நூற்​றுக்​கணக்​கானோருக்கு விருந்​தளிக்​கின்​றனர். இந்த இறு​திச் சடங்​கில் தங்​கள் வாழ்​நாள் சேமிப்பு முழு​வதை​யும் செல​விடு​கின்​றனர். இறு​தி​யில் ஒரு குடிசை​யில் வைத்து இறந்​தவர்​களின் உடல்​ எரியூட்​டப்​படு​கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X