Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 06 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
சின்னக்காலங்களில் செய்யாத சேடைகளை எல்லாம் பலரும் செய்திருப்பர். அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகள், பின்விளைவுகளை யாரும் உணர்ந்ததே இல்லை.
விசில் அடித்தல் என்பது ஓர் குறியீட்டு மொழியாகவே பயன்படுத்தப்படுகிறது. பெருநகரங்களை விடவும் கிராமபுறங்களில் விசில் ஒரு கலையாகும்.
யார்? எதற்காக? விசில் அடிக்கிறார் என்பதை புரிந்துகொண்டு, பதிலும் விசிலிலேயே வழங்கப்படும். நவீன யுகத்தில் விசல் அடிப்பது ஒரு வெட்கக்கேடான செயலாகவே பலரும் பார்க்கின்றனர்.
பேனை மூடியும் விசில் அடிப்பர், அவ்வாறு விசில் அடிக்கும் போது, வாய்க்குள் சென்ற பேனைமூடிய, இளைஞர் ஒருவரின் நுரையீரலுக்குள் 18 வருடங்கள் இருந்தமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், கேரள மாநிலம் கொச்சி அருகே ஆலுவா பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.
அங்கு வசிக்கும் சூரஜ் எனும் 32 வயதான இளைஞருக்கு நீண்டகாலமாக மூச்சுத் திணறல் இருந்து வந்துள்ளது.
அத்தோடு இருமலாலும் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதற்காகப் பல இடங்களில் அவர்
மருத்துவச் சிகிச்சை பெற்ற போதும் பூரண குணமடையவில்லை.
இந்நிலையில் கொச்சியில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்குச்
சென்றுள்ளார். அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் அவரின் நுரையீரலில் சிறிய
பொருள் ஒன்று இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
அறுவைச் சிகிச்சையின் போது அப்பொருள் பேனா மூடியெனக் கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த இளைஞரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இவர்
பாடசாலைக் காலத்தில் பேனா மூடியைப் பயன்படுத்தி விசில் அடிக்கும் பழக்கத்தினைக்
கொண்டிருந்தார் எனவும், அவ்வாறு அவர் விசில் அடித்த சந்தர்ப்பத்தில் பேனா
மூடியொன்றை விழுங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதும்
வைத்தியர்கள் பிரச்சினைகள் எதுவும் இல்லை என்று கூறியதாகவும் இருந்தபோதிலும்
இதன் பின்னரே தான் அடிக்கடி சுவாசப் பிரச்சினைகளுக்கு ஆளானதாகவும்
தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
03 May 2025
03 May 2025