2024 ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமை

மனைவிக்காக ஒரு பூந்தோட்டம்

Editorial   / 2023 ஓகஸ்ட் 03 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் உள்ள விவசாயியான  லீ வில்சன், தனது 50வது திருமண நாளை தனது மனைவியுடன் கொண்டாட 80 ஏக்கரில் 12 இலட்சம் சூரியகாந்தி செடிகளை பயிரிட்டுள்ளார்.

கன்சாஸ் மாகாணத்தில் வசிக்கும்   லீ வில்சன், தனது மனைவிக்கு 50வது திருமண ஆண்டு விழாவிற்கு பரிசளிக்க நினைக்கவில்லை என்றும், தனது மகனின் உதவியுடன் 80 ஏக்கரில் சூரியகாந்தி செடிகளை பயிரிட்டதாகவும் அமெரிக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ஏனெனில் அவரது மனைவி சூரியகாந்தியை விரும்பினார்.

எதிர்வரும் ஓகஸ்ட் 10ம் திகதி திருமண நாளுக்காக, கடந்த மே மாதம் தனது மகனின் உதவியுடன் சூரியகாந்தி பயிர்செய்கையில் ஈடுபட்டதாகவும், இதுவரை 80 ஏக்கருக்கு மேல் சூரியகாந்தி செடிகள் விளைந்துள்ளதாகவும்  வில்சன் தெரிவித்துள்ளார்.  

தனது மனைவியின் 50வது திருமண ஆண்டு விழாவிற்கு அவர் விரும்பும் ஒன்றை பரிசாக அளிக்கும் அதிர்ஷ்டம் தனக்கு கிடைத்ததாகவும், அதில் மகிழ்ச்சி அடைவதாகவும்   வில்சன், கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .