Editorial / 2025 டிசெம்பர் 19 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருமணத்திற்கு மணப்பெண்கள் மேக்கப் போடுவது வழக்கம் எனினும் அமெரிக்க பெண் அந்த கலாச்சாரத்தை மாற்றியுள்ளார்.
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தைச் சேர்ந்த 26 வயதான மெடிசன் அசிவேடோ என்ற இளம்பெண், தனது திருமணத்தன்று துளிக்கூட மேக்கப் செய்து கொள்ளாமல் மணமேடை ஏறிய வீடியோ இணையதளங்களில் பல மில்லியன் பார்வைகளைக் கடந்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தனது திருமணத்தில், தான் எப்போதும் எப்படி இருப்பேனோ அதே இயல்பான தோற்றத்தில் கணவரை மணக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிறுவயதில் முகப்பருக்களை மறைப்பதற்காக அதிகப்படியான அழகு சாதனங்களைப் பயன்படுத்திய கசப்பான அனுபவம் இருந்ததால், தனது வாழ்வின் மிக முக்கியமான நாளில் செயற்கையான தோற்றம் தேவையில்லை என அவர் முடிவு செய்துள்ளார்.
எளிமையான ஆடை மற்றும் பழங்கால பாணி அலங்காரங்களுடன் நடைபெற்ற இந்தத் திருமணத்தில், மணப்பெண்ணின் இந்தத் தன்னம்பிக்கையான முடிவை அவரது கணவரும் முழுமனதாக ஆதரித்துப் பாராட்டியுள்ளார்.
திருமணத்தன்று மணப்பெண் கண்டிப்பாக ஒப்பனை செய்து கொள்ள வேண்டும் என்ற சமூகத்தின் எதிர்பார்ப்பை உடைக்கும் வகையில் அமைந்துள்ள இவரது பதிவு, பல பெண்களுக்கும் தங்களது இயல்பான அழகை நேசிக்க ஒரு உந்துதலாக மாறியுள்ளது.
25 minute ago
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025