Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜூலை 06 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாடியிலிருந்து நாயை கீழே வீசி கொலை செய்த சென்னை மாணவர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கௌதம் சுதர்சனன் மற்றும் ஆஷிஷ் பால் ஆகிய குறித்த இரு மாணவர்களையும் குன்றத்தூர் பொலிஸார் இன்று காலை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் ஸ்ரீபெரும்புதூர் மாவட்ட நீதவான் நீதிமன்றமத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இளைஞர் ஒருவர் தெருநாய் ஒன்றை மூன்றாவது மாடியிலிருந்து தூக்கிப் போடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாக தீயாக பரவியது.
இதையடுத்து, அந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கும் இளைஞரை கண்டுபிடிக்க விலங்குகள் நல ஆர்வலர்கள் முயன்றனர்.
முடிவில், நாயைக் கீழேத் தூக்கி வீசியவரும் அதனை வீடியோ எடுத்தவரும் தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படிப்பவர்கள் எனத் தெரியவந்ததாக விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, கௌதம் சுதர்சனன் மற்றும் ஆஷிஷ் பால் ஆகிய இருவர் மீது குன்றத்தூர் பொலிஸ் நிலையத்தில் இந்தியக் குற்றவியல் சட்டம் 428, 429, மிருகவதைத் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago