2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

செயற்கை மார்பகத்திற்குள் 2.5 கி.கி. போதைப்பொருள் கடத்திய மொடல் அழகி கைது

Kogilavani   / 2011 டிசெம்பர் 24 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

செயற்கை மார்பகத்தினுள் வைத்து 2.5 கிலோகிராம் கொகேய்ன் போதை பொருளை கடத்திய மொடல் அழகியொருவரை  இத்தாலிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஸ்பெய்னைச் சேர்ந்த 33 வயதான பெண்ணொருவரே இவ்வாறு இத்தாலியின் ரோம் நகரிலுள்ள லியானார்டோ டாவின்சி விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளார்.

இம் மொடல் அழகி பிரேஸிலின் சா போலோ நகரிலிருந்து வந்த விமானமொன்றில்  ரோம் லியானார்டோ டாவின்சி  விமான நிலையத்தில் வந்திறங்கியபோதே கைதானார்.

அவரின் மார்பகங்கள் சாதாரண பெண்களின் மார்பகங்களைவிட அளவில் பெரிதாக காணப்பட்டதால் சுங்க பிரிவினரின் கவனத்தை ஈர்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதனையடுத்து சுங்கப் பிரிவினர் மேற்படி பெண்ணை சோதனையிட்டபோது அவர் பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட செயற்கை மார்பகங்களை பொருத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றுக்குள் 2.5 கிலோகிராம் கொகேய்ன் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதையும் இத்தாலிய சுங்கப்பிரிவினர் கண்டறிந்தனர்.

இப்போதைப் பொருளின் பெறுமதி சுமார்  2 கோடி இலங்கை ரூபாவாகும். இவர் தற்போது இத்தாலிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0

  • ummpa Monday, 26 December 2011 11:23 PM

    1kg போதாதா !

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .