2025 மே 14, புதன்கிழமை

16 வயது மாணவனுடன் பாலியல் உறவுகொண்ட ஆசிரியை கைது

Kogilavani   / 2012 மே 08 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க பாடசாலையொன்றில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர் 16 வயதான தனது மாணவனுடன் பாலியல் உறவுகொண்டுள்ளதுடன் தனது டொப்லெஸ் புகைப்படங்களையும் அச்சிறுவனுக்கு அனுப்பி வைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

புளோரிடா மாநிலத்தை சேர்ந்த கெசி கிறிஸ்டைன் வில்சன் என்ற 28 வயதான இப்பெண், ஒஸ்ஸியோலா உயர் பாடசாலையின் முன்னாள் ஆசிரியராவார்.

சிறுவர்களுடன் சட்டவிரோத பாலியல் நடவடிக்கை மற்றும் இலத்திரணியல் சாதனங்களினூடாக ஆபாசப் படங்களை அனுப்புதல் போன்ற குற்றச்சாட்டுக்களினால் மேற்படி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆசிரியை கிறிஸ்டைன், தன்னிடம் கல்வி கற்கும் பல மாணவர்களுடன் தகாத நடத்தையில் ஈடுபடுவதுடன் இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென மேற்படி ஆசிரியை கற்பித்த பாடசாலைக்கு ஒரு அநாமதேய கடிதம் வந்ததென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் தொழில் புரியும் இடத்திலுள்ள ஒரு மாணவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளாரென பொலிஸ் திணைக்களத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி ஆசிரியை தன்னை வகுப்பறைக்கு வெளியே அழைத்து பாலியல் உறவில் ஈடுபட்டதாக மாணவன் ஒருவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.

தனது கன்னித்தன்மையை மேற்படி ஆசிரியையிடம் இழக்க நேரிட்டமை குறித்து தான் வெட்கப்படுவதாகவும் அம்மாணவன் கூறியுள்ளான்.

அந்த ஆசிரியை அவரின் டொப்லெஸ்  படங்களை  தனது செல்லிடத் தொலைபேசிக்கு அனுப்பி வைத்தாகவும் அதை பார்த்து தான் அசௌகரியமடைந்ததாகவும் அம்மாணவன் தெரிவித்துள்ளான்.

You May Also Like

  Comments - 0

  • xlntgson Saturday, 12 May 2012 01:42 AM

    Karutthugalai kanavillai, matra karutthugalai paaraamal karutthu solla eppodhum iyalaadhu! Karutthu ellaam aerkappaduvadhum illai; karutthu solbavargalai madaiyargal aakkave muyarchi; thanadhu medhavi thanatthai kaatta alla, unmaiyai uratthu sollum karutthu vendum.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .