2025 மே 15, வியாழக்கிழமை

சொசேஜ் தயாரிக்கும் கலையில் பல்கலைக்கழகப் பட்டம்

Kogilavani   / 2010 ஓகஸ்ட் 23 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சொசேஜ் பிரியர்களான ஜேர்மனியர்கள் அவர்களது விருப்பத்திற்குரிய விடயதானத்தில் - அதாவது  சொசேஜ் தயாரிக்கும் கலையில் பட்டப்படிப்பை பூர்த்திசெய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது.

altசொசேஜ் நிபுணரான நோர்பர்ட் விட்மன் என்பவர் இந்த 'சொசேஜ் கல்வியகத்தை' நிறுவியுள்ளார்.

இந்த பட்டப்படிப்பை தேர்வு செய்பவர்களுக்கு சிறந்த முறையில் சொசேஜ் தயாரிப்பதற்கு பயிற்சி அளிக்கிறார்.

இந்த கல்வியகத்தினூடாக  மாணவர்கள் கலைமாணி  பட்டப்படிப்பை பூர்த்தி செய்ய முடியும். மாணவர்கள் விரும்பினால் முதுமாணி  கற்கைநெறிகளையும் தொடர முடியுமாம்.

இந்நிறுவனத்தில் இவ்வருடம் இதுவரை 1,300 மாணவர்கள் கலைமாணி பட்டப்படிப்பை பூர்த்தி செய்து  வெளியேறியுள்ளனர்.

இந்த கல்வியகத்தின் அதிபரான விட்மன் மேலும் கூறுகையில்,  'நான் சொசேஜை  விரும்புகின்றேன். தினமும் இரண்டு வெள்ளை சொசேஜஸ்கள் உண்பேன். ஞாயிற்றுக்கிழமை மட்டும் நான் வெள்ளை சொசேஜை உண்பதில்லை.
எனக்கு உலகம் முழுதும் மாணவர்கள் உள்ளனர். ஜேர்மனி நாட்டின் சொசேஜஸ் குறித்த நல்ல செய்தியை, உலகம் முழுவதும் பரப்புவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .