Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Kogilavani / 2010 டிசெம்பர் 16 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாய்வானைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணரச் செய்வதற்காக சவப்பெட்டியில் வைத்து பல நிமிடநேரம் உயிருடன் புதைக்கப்படுகின்றனர்.
'ரெண்டே மருத்துவ கல்லூரியில்' பதின்மர் வயதான மருத்துவ மாணவர்களுக்கே இந்த விசித்திர பாடம் நடத்தப்படுகிறது. மரணம் தொடர்பாக தெரிந்துகொள்வதற்கு இந்த பாடம் அவசியம் என விரிவுரையாளரகள் கூறுகின்றனர்.
இதில் பங்குபற்றும் மாணவர்கள் உயிலொன்றை எழுத வேண்டும். பின்னர் பிரேதங்களுக்கான உடைகள் அணிந்தவாறு சவப்பெட்டிக்குள் படுத்துக்கொள்ள வேண்டும்.
இம்மாணவர்கள் சவப்பெட்டியுடன் சேர்த்து புதைக்கப்பட்டு சில நிமிடங்களின் பின்னர் மீட்கப்படுவர்.
பேராசிரியர் கியு டேடெங் இது தொடர்பாக கூறுகையில் 'இது வெறும் 10 நிமிட பாடம்தான் என்றாலும் உண்மையான மரணத்திற்கு சமமான அனுபவம் இது' என விபரித்துள்ளார்.
இதில் பங்குபற்றிய மாணவர் ஸியாவோ லின் தெரிவிக்கையில் 'நான் சவப்பெட்டியில் இருந்து வெளியில் வந்ததும் மீண்டும் பிறந்து வந்ததாகவே உணர்ந்தேன். இப்போது வாழ்வின் ஒவ்வொரு நொடிகளினதும் முக்கியத்துவத்தை நான் உணர்ந்துக்கொண்டுள்ளேன்' எனத் தெரிவித்துள்ளார்.
tamilsalafi.edicypages.com Thursday, 16 December 2010 11:18 PM
பிணங்களை புதைக்கும் வழக்கம் உள்ளவர்களுக்கு சரி, எரிக்கும் பழக்கம் உள்ளவர்கள் என்ன செய்வார்களோ ?
Reply : 0 0
graphics Friday, 17 December 2010 07:20 AM
புதைக்கும் இடத்தை மறந்து விட வேண்டாம் விரிவுரையாலரே !!! பாவம் அப்பாவி மாணவர்கள்
Reply : 0 0
Zain Sunday, 19 December 2010 04:10 PM
மரணத்தின் பின்னுள்ள மண்ணறை வாழ்வு என்பது வெறுமனே ஓர் இருட்டறை வாழ்வுமட்டுமல்ல! மாற்றமாக உலக வாழ்வின்போது ஒருவன் எவ்வாறு வாழ்ந்தானோ அதன் பெறுபேற்றைக் கண்டுகொள்ள முடியுமான ஒரு வாழ்வும்கூட!அதாவது, ஒருவன் உலகில் சீதேவியாக வாழ்ந்திருந்தால் அவனது மண்ணறை வாழ்வும் பிரகாசமாக, சுகமானதாக இருக்கும். அவன் உலகில் மூதேவியாக வாழ்ந்திருந்தால் அவனது மண்ணறை வாழ்வும் இருள் நிறைந்ததாக, வேதனைகள் நிறைந்ததாகவே இருக்கும்.
மண்ணறைக்குள் ஒரு முறை போய்த்தான் இதனைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றில்லை. நாம் பின்பற்றும் சமயங்கள் போதிக்கின்ற குறிப்பாக இஸ்லாம் முன்வைக்கின்ற ''மரித்த பின் மனித வாழ்வு'' குறித்து நடுநிலையாடு படித்துப் பார்த்தால் அதுவே ஒரு மனிதனுக்குப் போதுமானதாக இருக்கும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
41 minute ago
43 minute ago
52 minute ago