Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Kogilavani / 2011 மார்ச் 09 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனடாவிலுள்ள கழுகொன்று மல்லாக்காக பறந்து பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.
இந்தக் கழுகை முதலில் அவதானிப்பவர்கள் இது மல்லாக்காக வானிலிருந்து கீழ் நோக்கி விழப்போவதாக எண்ணுவார்கள். நன்கு அவதானித்த பின்னர், அது உண்மையில் மல்லாக்காக பறக்கிறது என்பதை உணர முடியும்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தைச் சேர்ந்த பாம் முல்லின்ஸ் என்பவரது வீட்டின் அருகில் இந்தக் கழுகு பறந்துக் கொண்டிருந்தபோது அவர் அதனை படம் பிடித்துள்ளார். அவ்வேளையில் தரையிலிருந்து சுமார் 200 அடி உயரத்தில் மேற்படி கழுகு பறந்துக்கொண்டிருந்துள்ளது.
இதுக் குறித்து பாம் (வயது 49) தெரிவிக்கையில், 'கழுகுகள் பறந்துக்கொண்டிருக்கும் போது சரியானதொரு படத்தை எடுப்பதற்கு நான் பலவருடங்காக முயற்சித்தேன். ஆனால் அது கடினமானது. ஏனெனில் வழுக்கை தலையுடைய மேற்படி கழுகுகள் ஒரு மணித்தியாலத்திற்கு 43 மைல் வேகத்தில் இறக்கையை அசைக்காமல் பறக்க கூடியவை. அதேவேளை இறக்கை அடித்து பறக்கும்போது மணித்தியாலத்திற்கு 99 மைல் வேகத்தை அடையக்கூடியவை' என அவர் தெரிவித்தார்.
jaliyath Thursday, 10 March 2011 06:41 PM
இறைவன் ஒருவன் என்பதற்கு இதை விட என்ன அத்தாட்சி வேண்டும்?
Reply : 0 0
xlntgson Sunday, 13 March 2011 09:32 PM
கழுத்தில் வலியோ தெரியாது?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
14 May 2025
14 May 2025
14 May 2025