Kogilavani / 2011 ஜூன் 17 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் இரு கைகளும் இல்லாத நிலையில் பிறந்த மனிதரொருவர் மிகச் சிறந்த வில்வித்தை வீரராக உருவாகியுள்ளார்.
அமெரிக்காவின் ஐயோவா நகரை பிறப்பிடமாகக் கொண்ட 29 வயதான மாட் ஸ்டட்ஸ்மன் எனும் இவர் எதிர்வரும் 2012 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் வில்வித்தை போட்டியில் பங்குபற்றுவதற்கு தெரிவு செய்யப்படலாம் என நம்பிக்கை கொண்டுள்ளார்.
அவர் கைகளுக்கு பதிலாக காலின் மூலம் வில்லை பிடித்து, வாயின் மூலம் அம்பை எய்கிறார். இந்த நுட்பம் தனக்கு சாதகமாக அமைந்துள்ளது என அவர் கூறுகிறார். ' தனது போட்டியாளர்களின் கைகளைவிட தனது கால்கள் வலுவானவையாக இருக்கின்றதென ஸ்டட்ஸ்மன் கூறுகிறார்.
அவர் அமெரிக்க வில்வித்தை வீரர்களுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் அதிக புள்ளிகளைப் பெற்று ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார். தற்போது அவர் வில்வித்தைப் தெரிவுப் போட்டிகளுக்காக அமெரிக்க வில்வித்தை குழுவுடன் இத்தாலிக்குச் சென்றுள்ளார்.
இதுத் தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 'நான் லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தெரிவுசெய்யப்படுவேன் என்பதில் உறுதியுடன் இருக்கின்றேன். அப்போட்டிக்கு நான் தெரிவு செய்யப்பட்டால் நிச்சயம் தங்கப் பதக்கத்தை சுவீகரிப்பேன்' எனக் கூறியுள்ளார்.
ஸ்டஸ்மன் ஒருபோதும் தான் அங்கவீனமான நிலையால் துவண்டுவிடவில்லை. கைகள் உள்ள மனிதர்கள் செய்யும் வேலையை தான் தனது கால்களால் நிறைவேற்றிக்கொள்வதாக கூறுகிறார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஸ்டஸ்மன், சாதாரண மனிதர்கள் செய்யும் எதையும் தன்னாலும் செய்ய முடியுமென சவால் விடுகிறார்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
Hot water Saturday, 18 June 2011 04:09 AM
உண்மையான சாதனையாளன்
Reply : 0 0
Nilavan Monday, 20 June 2011 03:06 PM
இது வினோத உலக செய்திகளுக்கு சிறந்த உதாரணம். இவற்றை அதிகமாக வழங்குவதை விட்டு விட்டு நிர்வாண/ அரை நிர்வாண செய்திகளை வினோத உலகத்தில் வழங்குகின்றீர்கள். இலங்கை நாட்டு கலாசாரங்களை மதிக்கும் விதமாக செய்திகளை வழங்குங்கள். உங்கள் சேவை சிறப்புற வாழ்த்துகின்றேன்...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025