2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பாம்புகளைத் திருடி காற்சட்டைக்குள் பதுக்கிய நபர் நெருக்கடியில்

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 27 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்காவில் கடையொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த  விலை உயர்ந்த 5 பாம்புகளை திருடி, அவற்றை தான் அணிந்திருந்த காற்சட்டைக்குள் மறைத்துக் கொண்டு சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அரிஸோனா மாநிலத்திலுள்ள மேசா எனும் நகரிலுள்ள கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 5 பாம்புகளை, எரிக் பீகல் எனும் 22 வயது இளைஞர் திருடி, தனது காற்சட்டைக்குள் மறைக்கும் காட்சி அக்கடையிலிருந்த கமராவில் பதிவாகியுள்ளது.

குறித்த இளைஞர் கடையை விட்டுவெளியேறுவதற்கு முன் ஒரு மணித்தியாலம் அக்கடைக்குள் சுற்றி திரிந்து குறித்த பாம்புகளை தனது காற்சட்டைக்குள் திணித்தார் என கடையின் உரியமையாளரான கிறிஸ்டியன் கலேட்டா என்பவர் தெரிவித்துள்ளார்.

அந்த இளைஞர் திருடிய பாம்புகளில் ஒன்று மிக அரிய வகைப் பாம்பு எனவும் அது சுமார் 1000 டொலர் பெறுமதியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பீகல் குறித்த பாம்புகளை மற்றுமொரு செல்லப்பிராணி விற்பனைக் கடையொன்றுக்கு கொண்டு சென்றிருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0

  • Hot water Sunday, 28 August 2011 05:08 AM

    ம்ம்ம். சும்மா கிடந்த பாம்பை பிடிச்சு காற்சட்டைக்குள் போட்டுக்கொண்ட கதையா போச்சு.

    Reply : 0       0

    tayabaran Wednesday, 31 August 2011 02:37 AM

    பாவம் அவருக்கு வேலை இல்லை போல. அதுதான் அவர் பாம்பை திருடியிருக்கின்றார் நல்ல வேலைதானே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .