2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

திரைப்பட காட்சிகளை விரல் நகங்களில் வரைந்த பெண்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 19 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்பெய்னைச் சேர்ந்த ஓவியர் ஒருவர் தனது அபிமான திரைப்படங்களின் காட்சிகளை நம்ப முடியாத வகையில் தன் கைவிரல் நகங்களில் வரைந்து பாராட்டு பெற்றுக்கொண்டுள்ளார்.

மாயா பிக்ஸ்ஸெல்ஸ்கியா எனும் 26 வயதான இப்பெண் கைவிரல் நகங்களில் அத்திரைப்படங்களின் காட்சிகளை மிக சிரமப்பட்டு வரைந்துள்ளார். உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களான ஜாவ்ஸ் மற்றும் அமெலி ஆகியவற்றின் காட்சிகளும் இவற்றில் அடங்கும்.

அதேவேளை, 'மங்கி ஐலன்ட்', 'டூம்' போன்ற  வீடீயோ கேம்களையும் தனது நகங்களில் அவர் வரைந்துள்ளார்.  

'நான் வீடியோ கேம் மற்றும் கலையை விரும்புபவள். அதனால் தனித்துவமான டிசைன்களை உருவாக்குவதற்கு இரண்டையும் ஒன்றிணைக்கத் தீர்மானித்தேன்' என அவர் விபரித்துள்ளார்.

பல்கலைக்கழக பரீட்சைக்காக படிக்கும் போது சோர்வு ஏற்பட்ட வேளைகளில் இந்த ஓவியங்களை வரைந்ததாக அவர் கூறுகிறார்.

எனது விரல் நகங்களில் ஓவியங்களை வரைந்தபின் அது காய்வதற்கு ஒரு மணித்தியாலம் தேவைப்பட்டது. எனவே  இது அதிக நேரத்தை செலவிட நேரும் விடயமாகும்.

ஒவ்வொரு நகங்களிலும் 5 அல்லது 6 லேயர்ஸ்களை என்னால் வரைய முடியும். அதனால் அவை சாதாரண நகங்களைவிட தடிப்பானதாக தெரியும்' என அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X