2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தாம் அணியும் பிரா அளவை வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படுத்த நிர்ப்பந்தித்த நிறுவனம்

Kogilavani   / 2011 நவம்பர் 11 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சுவீடனில் உள்ளாடை விற்பனைக் கடையொன்றில் பணியாற்றும் பெண்கள் தாம் அணியும் பிராவின்  அளவு குறிப்பிடப்பட்ட அட்டையொன்றை  அணிய வேண்டுமென்று அக்கடையின் உரிமையாளர்கள் கூறியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் சரியான அளவு மார்புக் கச்சைகளை பெற்றுக்கொள்ள உதவும் நோக்கில் தமது ஊழியர்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டதாக 'சேஞ்ச்' எனும் மேற்படி நிறுவனம் அறிவித்தல் விடுத்துள்ளது.

ஆனால், தமது மார்பின் சுற்றளவையும்  பிரா கப் அளவையும் வெளிப்படுத்தும் அட்டையை அணிய வேண்டுமென்று தாம் கட்டாயப்படுத்தப்படுவதாக ஊழியர்கள் முறையிட்டுள்ளனர்.

'எங்கள் கடைக்கு தீய குணமுடைய முதியோர்கள் வந்து எங்களது பிரா கப் அளவை பார்க்கின்றனர்' என பெண்ணொருவர்  முறையிட்டுள்ளார்.

'எங்களது மார்பக கச்சைகளின் அளவு எல்லோருக்கும் ஏன் தெரிய வேண்டும். ஆண்கள் அவர்களது உள்ளாடைகளை விற்கின்றார்கள். ஆனால் அவர்கள் தமது அளவை வெளியில் காட்டிக்கொள்ளத் தேவையில்லையே' என அப் பெண் கூறியுள்ளார்.

சேஞ்ச் நிறுவனத்தின்  பிரதம நிறைவேற்று அதிகாரியான சுசான் ஹாக்லன்ட் இது குறித்து தெரிவிக்கையில்,  இந்த யோசனை ஊழியர்களாலேயே முதலில் தெரிவிக்கப்பட்டதாக கூறினார்.

வாடிக்கையாளர்களின்; உடல் அமைப்புக்கு எந்த அளவிலான மார்பக கச்சைகள் பொருந்தும் என்பதை தெரிந்துகொள்வதற்கு தமது மார்புக் கச்சை விபரங்களை வெளிப்படுத்துவதன் மூலம் உதவ, ஊழியர்கள் முற்பட்டனர்.

இந்த விடயத்தை அவர்கள் ஏன் தவறாக பார்க்க வேண்மென்று எனக்கு தெரிவில்லை. அவர்கள் அந்த விதத்தில் எண்ணக்கூடும். ஆனால் தொண்டர்கள் தமது மார்பக் கச்சைகளின் அளவை வெளிப்படுத்தும் குறிப்பை அணிவது முற்றிலும் அவர்களின் விருப்பத்தின்படியானது என நான் உறுதியளிக்கிறேன்' என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால்,  இந்த அட்டையை அணிய வேண்டும் என்பது சட்டவிரோமானது என வர்த்தக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.  இந்ந உத்தரவுக்கு எதிராக கம்பனி மீது வழக்கு தொடுக்கப் போவதாகவும் அச்சங்கம் எச்சரித்துள்ளது.


  Comments - 0

  • susil Thursday, 17 November 2011 12:46 AM

    என்ன இங்கே ஒரே விசேசம், இது இப்போ இல்லாட்டி இன்னும் மூன்று நான்கு வருடத்தில் வரும் பொறுத்து இருங்கள். யார் மணி கட்டுவது என்பதுதான் இப்போ பிரச்சனை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .