2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கலண்டருக்கு கவர்ச்சி போஸ்கொடுத்த பிரித்தானிய விளையாட்டு வீராங்கனைகள்

Kogilavani   / 2011 டிசெம்பர் 26 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அடுத்த வருடம் லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றவுள்ள பிரித்தானிய விளையாட்டு வீராங்கனைகள் சிலர் இணைந்து உள்ளாடைகளை மாத்திரம் அணிந்த நிலையில் கலண்டர் ஒன்றுக்கு போஸ்கொடுத்துள்ளனர்.

பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றும்  11 பெண்கள் இணைந்து இக்கலண்டருக்கு போஸ் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த கலண்டாரானது 9.99 ஸ்ரேலிங் பவுண் விலையில் விற்பனை செய்யப்படும்.  இதன்மூலம் திரட்டப்படும் நிதி பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக செயற்படும் தொண்டு நிறுவனமொன்றுக்கு  வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கலண்டருக்குப் போஸ் கொடுத்த பெண்கள் அனைவரும் ஜுலை மாதம் லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு தெரிவுசெய்யப்பட வாய்ப்புள்ள வீராங்கனைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

2007 ஆம் ஆண்டு ஐரோப்பிய உள்ளக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளில் 400 மீற்றர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் பெற்ற நிகோலா சாண்டர்ஸும் இவர்களில் ஒருவராவார்.


  Comments - 0

  • Nishanthan Wednesday, 28 December 2011 01:45 AM

    இதற்கெல்லாம் ஒலிம்பிக்கில் போட்டி வைத்தால்தங்கம் உங்களுக்குத்தான் வீராங்கனைகளே

    Reply : 0       0

    bzukmar Wednesday, 28 December 2011 05:46 AM

    துகிலுரி காட்சி போலிருந்தாலும், அதிலிருந்து கிடைக்கும் நிதி பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கு செலவு செய்யபடுவது, பெண்களையும், வளர்ந்த பின்னர் குழந்தைகளையும் இவ்வீர நங்கைகளினது ஆளாக்காதிருக்க வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .