2025 ஜூலை 17, வியாழக்கிழமை

'கடவுள்' என பச்சை குத்திக்கொண்டு சிறை அதிகாரியை பின்தொடர்ந்த பெண் கைது

Super User   / 2012 மே 01 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் பெண் சிறைச்சாலை அதிகாரி ஒருவரை பின்தொடர்ந்து தொல்லைக்கொடுத்த குற்றச்சாட்டில் 33 வயதான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான இப்பெண், தனது நெற்றியில் இறைவன் (கடவுள்) என பச்சைக்குத்திக் கொண்டிருந்தமையால் இலகுவாக இனம்காண முடிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜெமி கொலோவே எனும் இப்பெண், மேற்படி சிறைச்சாலை அதிகாரியின் வீட்டிற்கு தொலைபேசி அழைப்புகளை விடுத்ததுடன் தபாலில் பொதிகளையும் அனுப்பியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில், முகத்திலும் நெற்றியிலும் பச்சைக்குத்திக்கொண்டு குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படும் சந்தேந நபர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X