2025 மே 14, புதன்கிழமை

மாடுகளின் கழுத்தில் மணி கட்டுவதற்கு நீதிமன்றம் தடை

Kogilavani   / 2012 ஜூலை 24 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாடுகளின் கழுத்தில் மணி கட்டுவதற்கு ஆஸ்திரிய நீதிமன்றமொன்று தடைவிதித்துள்ளது.

இவ்வாறு மாடுகளின் கழுத்தில் கட்டப்படும் மணிகளின் ஒலி  இரவு வேளைகளில் தாம் நித்திரை கலைந்தெழுவதற்கு காரணமாக அமைவதாக பலர் முறைப்பாடு செய்தததை தொடர்ந்து நீதிமன்றினால் இவ்வாறு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரியாவின் ஸ்டால்ஹோபன் கிராம மக்களுக்கு சார்பாகவே இவ்வழக்கு தொடுக்கப்பட்டது.

மாடுகளின் கழுத்தில் மணிகட்டுவது பாரம்பரிய வழக்கமாகும் எனக்கூறிய மாடுகளின் உரிமையாளர், மணிகளை அகற்றுவதற்கு மறுப்பு தெரிவித்தார்.

இது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டதையடுத்து மாடுகளின் கழுத்திலுள்ள மணிகளை அகற்ற வேண்டுமென நீதிமன்றமொன்று கடந்த மே மாதம் தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்புக்கு எதிராக மாடுகளின் உரிமையாளர் மேன்முறையீடு செய்திருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எரிக் குண்ட்கிராப்பர், மேற்படி தீர்ப்பை உறுதிசெய்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக, போக்குவரத்து சிரமம் மிகுந்த ஸ்டால்ஹோபன் கிராமத்திற்கு நீதிபதி எரிக் குண்ட்கிராப்பர் நேரில் சென்றமை குறிப்பிடத்தக்கது.

இக்கிராமத்தில் பசுக்களுக்கு கழுத்தில் கட்டப்படும் மணியானது பேரிரைச்சலை ஏற்படுத்துவதாகவும் இதனால் இக்கிராமத்திலுள்ளவர்கள் நித்திரை கலைந்து எழும்புவதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

மாடுகளின் கழுத்திலுள்ள மணிகளை அகற்றுமாறு உத்தரவிட்ட நீதிபதி, இந்த உத்தரவை அமுல்படுத்த தவறினால் மாடுகளின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .