2025 மே 12, திங்கட்கிழமை

தாய்மைக்கு வயதில்லை

Gavitha   / 2015 ஜனவரி 21 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகத்திலுள்ள எந்தவொரு விடயத்துக்கு வேண்டுமானாலும் சரியான விளக்கமொன்றை கொடுக்க முடியும். அதற்கு பல்வேறு உத்திகளை கையாண்டு விளக்கத்தை தேடவும் முடியும். ஆனால் தாய் அல்லது அம்மா என்ற வார்த்தைக்கு சரியான விளக்கத்தை தேடுவது மிகவும் கடினம். சொற்களாலோ செயல்களாலோ விபரிக்க முடியாதவரே தாயாவார்.


வட இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் வசித்துவரும் உலகிலேயே மிகவும் வயது முதிர்ந்த தாயொனருவரின் வாழ்க்கை தொடர்புடைய செய்திகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


ஆம், இத்தாய்க்கு 76 வயதாகின்றது. இவருக்கு 6 வயதுடைய சிறுவனொருவன் இருக்கின்றான். இவருக்கு 70 வயதிருக்கும் போது இவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.


அதில் 4 வயதிருக்கும் போதே ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. வயது முதிர்ந்து விட்டது என்று கூட பார்க்காது சிரமப்பட்டு தனது மற்றுமொரு மகனை இவர் வளரத்து வருகின்றார்.


தனது கணவருக்கு 89 வயாதாகின்ற நிலையில், தான் இப்படியொரு சிறுவனை வளர்ப்பதற்கு மிகவும் பெருமையடைகின்றேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.


இச்சிறுவன் உங்களுடைய பேரனா என்று பலர் பலமுறை என்னிடம் கேட்டுள்ளனர். இல்லை இது எனது மகன் என்று கூறுகையில் என்னை வித்தியாசமாக பார்ப்பார்கள். அதுபற்றி நான் கவலையடைவது இல்லை. எனக்கு இருக்கும் உணர்வு சொற்களால் விளங்கப்படுத்த முடியாத ஒன்றாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X