2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

கவர்ச்சியால் கைதிகளை விடுவித்த பெண்கள்

Gavitha   / 2015 பெப்ரவரி 10 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடொன்று பதிவு செய்யவேண்டும் என்று நினைத்தாலே கை, கால்கள் பதறும். அப்போது சிறைச்சாலைக்கு செல்வதென்றால்?


இது இவ்வாறிருக்க, சிறைச்சாலைக்கு சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த 28 சிறைக்கைதிகள் தப்ப உதவி புரிந்த 3 பெண்கள் தொடர்பாக கேள்விப்பட்டுள்ளீர்களா?


ஆம், மத்திய பிரேசிலில் உள்ள குய்யபா நகரத்துக்கு அருகில் இருக்கும் நோவா மடம் பொதுச்சிறைச்சாலையிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.


3 பெண்கள் பொலிஸ் சீருடையை மிகவும் கவர்ச்சியாக அணிந்துகொண்டு சிறைச்சாலைக்குள் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்த 3 சிறை பாதுகாவலர்களிடம் ஆசை வார்த்தை காட்டி அறை ஒன்றுக்குள் அழைத்து சென்றுள்ளனர்.


அறைக்கு சென்றதும் மயக்க மருந்து கலந்த மதுபானத்தை பாதுகாவலர்களுக்கு அருந்த கொடுத்துள்ளனர். அதனை அருந்திய 3 சிறை பாதுகாவலர்களும் அங்கேயே மயங்கி விழுந்துள்ளனர்.


இதன் பின்னர், 3 பெண்களும் மயங்கியிருந்தவர்களை நிர்வாணப்படுத்திவிட்டு, அவர்களிடம் இருந்த சிறைச்சாலை சாவிகாளை எடுத்து சென்று அங்கிருந்த 28 சிறைக்கைதிளுக்கு தப்பியோட உதவி செய்துள்ளனர்.


தப்பிச்சென்றவர்கள் அனைவரும் சிறைச்சாலையில் பிரதான வாயில் வழியாகவே வெளியே சென்றுள்ளனர். செல்லும் போது, சிறை பாதுகாவலர்களின் துப்பாக்கிகளையும் எடுத்துச்சென்றுள்ளனர்.


இதன்பின்னராக கிடைக்கப்பெற்ற தகவலையத்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிஸார், அந்த 28 கைதிகளையும் மீண்டும் கைது செய்துள்ளனர். தப்பிச்சென்றவர்களில் அங்கு வந்த பெண்ணொருவரின் காதலரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.


விசாரணைகளின் பின்னரே, இந்த திட்டம் அந்த பெண்ணின் காதலனுடையது என்று தெரியவந்துள்ளது. மேலும் சிறைச்சாலை விதிகளை மீறயதற்கும் துப்பாக்கிகளை தவறவிட்டமைக்கும் சிறை பாதுகாவலர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளதாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .