2025 செப்டெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

1 மில்லியன் பேரை விழிப்பிதுங்க வைத்த நிர்வாணப்பாய்ச்சல்

Kogilavani   / 2015 மார்ச் 04 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகில் நடக்கும் விநோதமான செயற்பாடுகளை கண்டு மனமகிழும் அதேநேரத்தில் நொந்துகொள்ளவும் செய்கின்றோம்.
இவ்வாறிருக்கையில்,  நபரொருவர்  மாடிக்கட்டடமொன்றில் இருந்து நிர்வாணமாக கீழே குதித்த சம்பவம் பலரை விழிப்பிதுங்க செய்துள்ளது.

இக்காட்சிகள் அடங்கி காணொளி இணையத்தளத்தில் வெளியாகி  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டன், பெக்கின்ஹாம்  நகரத்திலேயே இச்  சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேற்படி பகுதியில், சம்பவ தினத்தன்று, பொலிஸ் குதிரை அணிவகுப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, நகரில் இருந்த மக்கள் அனைவரும் குதிரை அணிவகுப்பை பார்த்து புகைப்படமெடுத்தவண்ணம் இருந்துள்ளனர்.

இதன்போது, அவ்விடத்துக்கு சென்ற சுவீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியொருவர் குதிரை அணிவகுப்பை காணொளியாக்கிக் கொண்டிருந்துள்ளார்.

இதன்போது, அந்த காணொளியில ; நபரொருவர் மாடிக்கட்டடத்திலிருந்து நிர்வாணமாக வெளியே வருவது  தென்பட்டுள்ளது. சுற்றுலா பயணி காணொலியை உற்றுப்பார்த்துள்ளார்.

அதில்,  மேற்படி நபர் நிர்வாணமாக படுக்கை விரிப்பொன்றை பயன்படுது;தி மேல்மாடியிலிருந்து கீழே குதிக்கும் காட்சி தென்பட்டுள்ளது.

அந்நபர், ஏன் இவ்வாறு செய்தார், அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி எதுவுமே தெரியவில்லையாம்.

ஆனால், இந்த சம்பவம் அடங்கிய காணொளி இணையத்தளத்தில் வெளியிடப்பட்டதன் பின்னர், 3 நாட்களுக்குள் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமானோர் இதனை பார்வையிட்டுள்ளனராம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X