Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோடைக்காலம் வரும்போது, உடலுக்கு குளிர் தேவைப்படும். என்னதான் செய்தாலும் பகலிலோ இரவிலோ உணவுக்கு பின்னர் ஒரு ஐஸ்கிறீம் உண்ண வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு.
ஆனால், இந்த ஐஸ்கிறீமை சாப்பிடுவதற்காக, நள்ளிரவில் எழுந்து தனியாக பஸ் ஏறிச் சென்ற 4 வயது சிறுமி பற்றி கேள்வியுற்றுள்ளீர்களா?
அமெரிக்காவின் பிலடெல்பியா நகரிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
அனெபெல் என்ற 4 வயது சிறுமிக்கும் 'ஸ்லஷி' ஸ்கிறீம் என்றால் மிகவும் பிடிக்கும். அவருக்கு நள்ளிரவு 3 மணியளவில் திடீர் என்று அந்த ஐஸ்கிறீம் சாப்பிடவேண்டும் என்று ஆசை வந்துள்ளது.
பெற்றோர் தூங்கிக்கொண்டிருப்பதால், நள்ளிரவு வேளையில் வீட்டின் பின்கதவு வழியே மெதுவாக வெளியேறிய அவர், வீதியில் சென்ற பஸ்ஸை கைகாட்டி நிறுத்தி அதில் ஏறியுள்ளார்.
இரவு நேரத்தில் அணியும் பிஜாமா உடையின் மீது மழைக்கு அணியும் கோட்டை போட்டுக்கொண்டு பஸ்ஸில் ஏறிய சிறுமியை கண்ட பஸ் ஓட்டுநர் மிரண்டுபோயுள்ளார்.
பின்னர் பஸ்ஸின் நடத்துனர் எங்கே போக வேண்டும்? என்று கேட்டுள்ளார். அதற்கு எனக்கு தேவையானதெல்லாம் ஒரேயொரு 'ஸ்லாஷி' என்று அந்த சிறுமி பதிலளித்துள்ளார்.
இதனைக்கேட்ட பஸ் ஓட்டுநர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பஸ்ஸூக்கு வந்த பொலிஸார் அந்த சிறுமியை அருகில் இருந்த வைத்தியசாலைக்கு அழைத்து சென்று அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
தனது மகளுக்கு அடிக்கடி 'ஸ்லஷி' ஐஸ்கிறீம் வாங்கித்தருவதாகவும் அந்த ஞாபகம் வந்தவுடன் நள்ளிரவு என்று பார்க்காது வீட்டை விட்டு வந்துள்ளார் என்றும் சிறுமியின் பெற்றோர் பொலிஸாருக்கு தெரிவித்து விட்டு சிறுமியை அழைத்த சென்றுவிட்டனராம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago