2025 டிசெம்பர் 05, வெள்ளிக்கிழமை

25 வயசுல இப்படியா? நம்பவே முடியல

Editorial   / 2025 ஓகஸ்ட் 26 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இணையத்தில் தற்போது அனைவரையும் கவர்ந்து வரும் பெண்ணின் பெயர் ரெபேக்கா மா. ‘பெக்கா ப்ளூம்’ என டிக்டோக்கில் அறியப்படும் இவர், வெறும் 25 வயதிலேயே 54 லட்சம் பின்தொடர்பவர்களை பெற்றுள்ளார். தனியார் ஜெட் பயணம், பல்கேரி நகை சேகரிப்பு, ஆடம்பர ஃபேஷன், செல்ல பூனைகளுக்குக் கேவியர் உணவு என தனது அட்டகாசமான வாழ்க்கை முறையை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்.

‘#RichTok’ எனப்படும் லக்ஷரி கலாச்சாரத்தை இந்தியர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் நெருக்கமாக அறிமுகப்படுத்தியுள்ளார். 2025 ஜனவரியில் தனது டிக்டோக் கணக்கைத் தொடங்கிய பெக்கா, 8 மாதத்தில் 38 லட்சம் பின்தொடர்பவர்களை ஈர்த்ததோடு, இன்ஸ்டாகிராமிலும் விரைவில் வெற்றி பெற்றார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஏதர்டனில் வளர்ந்த பெக்காவின் பெற்றோர் சைமன் யிமிங் மா மற்றும் ஹெய்டி சோவ் ஆகியோர் ‘கேம்லாட்’ எனும் ஐடி நிறுவனத்தை தொடங்கி அதனை மிகப்பெரிய அளவிற்கு வளர்த்துள்ளனர்.

இதே பாதையில், பெக்காவும் தனது பள்ளி நாட்களிலிருந்தே ஸ்டார்ட்அப்புகளில் ஈடுபட்டு, பல திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளார். தற்போது தனது சமூக ஊடக பதிவுகள் மூலம் உலகம் முழுவதிலும் பிரபலமான பெக்கா, இளம்பேண்கள் மத்தியில் செல்வமும், ஃபேஷனும் கலந்த லைஃஸ்டைல் வாழ்க்கையைப் பிரபலமாக்கியுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X