Editorial / 2025 நவம்பர் 19 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

வன உயிர்வாழும் போட்டி ஒன்றில் கலந்துகொண்ட சாவோ டிஷூ என்ற 25 வயதுப் பெண், 35 நாட்கள் காட்டில் வாழ்ந்ததன் மூலம் வெண்கலப் பதக்கம் வென்றதுடன், தனது எடையை 14 கிலோ குறைத்து சாதனை படைத்துள்ளார்.
கிழக்குச் சீனாவில் உள்ள ஷேஜியாங் மாகாணத் தீவு ஒன்றில் அக்டோபர் 1-ஆம் திகதி தொடங்கிய இந்தப் போட்டியில், அவர் நவம்பர் 5-ஆம் திகதி வரை 35 நாட்கள் சவாலை எதிர்கொண்டார்.
ஆரம்பத்தில் 85 கிலோ இருந்த அவரது எடை, போட்டி முடிவில் 71 கிலோவாக குறைந்தது. 40 டிகிரி வெப்பம், கைகளில் ஏற்பட்ட சிராய்ப்புகள், கால்களில் பூச்சிக் கடிகள் மற்றும் கடுமையான வெயிலினால் ஏற்பட்ட தோல் பாதிப்பு எனப் பல சவால்களைச் சந்தித்த போதும், எடை குறைந்தது பெரிய சாதனை என்று சாவோ டிஷூ குறிப்பிட்டுள்ளார். 35 நாட்கள் சவாலை முடித்ததற்காக அவருக்குப் பரிசாக 7,500 யுவான் ( இலங்கை மதிப்பில் சுமார் 325086.92) ரூபாய் ரொக்கமாக கிடைத்தது.
சாவோ டிஷூ தனது எடை குறைப்புக்கு முக்கியக் காரணம், காட்டில் அவர் சேகரித்த புரதம் நிறைந்த உணவுப் பொருட்கள்தான் என்று விளக்கினார். அவரது உணவில் நண்டு, கடல் அர்ச்சின் மற்றும் அபலோன் போன்ற கடல் உணவுகள் இருந்தன. மேலும், 35 நாட்களில் அவர் சுமார் 50 எலிகளை வேட்டையாடி, சமைத்துச் சாப்பிட்டதாகவும், எலிகள் மிகவும் சுவையாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

3 minute ago
42 minute ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
42 minute ago
3 hours ago
6 hours ago