2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

6 வயது மகனுக்காக வாகனத்திற்குள் நீச்சல் தடாகத்தை அமைத்துக் கொடுத்த நபர்

Kogilavani   / 2012 ஜூலை 13 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


சீனாவைச் சேர்ந்த நபரொருவர், தனது மகனின் பொது நீச்சல் தடாகத்தில் குளிப்பதை விரும்பாமல் நடமாடும் நீச்சல் தடாகமொன்றை தனது வான் ஒன்றுக்குள் அமைத்துக்கொடுத்துள்ளார்.

சீனாவின் செய்ஜிங் மாகாணத்தில் 38 செல்சியஸ் பாகையில் வீசி வரும் வெப்பக் காற்றுக்காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.  வெப்பத்தை தணித்துக் கொள்வதற்காக பலர் நீச்சல் குளங்களை நாடிச் செல்கின்றனர்.

இந்நிலையில்,  யோங் என்பவர் தனது மகனுக்கு இவ்வாறான நடமாடும் நீச்சல் தடாகத்தை அமைத்துக்கொடுத்துள்ளார்.

பொது நீச்சல் தாடகத்தில் தன் மகன் குளிப்பதை தான் விரும்பவில்லை என்று கூறி, வானின் பின் இருக்கைகளை அகற்றிவிட்டு இந்நீச்சல் தடாகத்தை மேற்படி நபர் அமைத்துள்ளார்.

இதேவேளை, அந்த நீச்சல் குளத்தில் நீந்துவதற்கு தேவையான மிதக்கும் தன்மையுடைய வளையம் மற்றும் ஏனைய விளையாட்டுப் பொருட்களை தனது மகனுக்கு அவர்  வாங்கிக் கொடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .