A.P.Mathan / 2012 ஜூலை 20 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இம்முறையும் இரு அணிகளும் சம பலமாக தென்படுகின்றன. இலங்கை அணி இன்னும் கொஞ்சம் பலமாக இருக்கின்றது என்று சொல்லலாம். உலகக் கிண்ண போட்டிகளின் பின் இலங்கை அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றது. மற்ற இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அடித்து துவைத்து விட்டது இலங்கை அணியை. அவுஸ்திரேலியாவில் வைத்து மறக்க முடியாத துரத்தி அடித்த அந்தப் போட்டி. ஆசிய கிண்ண போட்டிகளிலும் அதே நிலை. எனவே இலங்கை அணி இவற்றிக்கு எல்லாம் இலங்கையில் வைத்து பதில் கொடுக்குமா? சச்சின் இல்லை. யுவராஜ் சிங் இல்லை. மற்றப்படி இந்திய அணி முழுமையான அணி. இலங்கை அணியோ முழுமையான அணி. மூன்று மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. ஹம்பாந்தோட்டை, பல்லேகல ஆகிய மைதானங்களில் இந்திய அணி முதற் தடவையாக விளையாடவுள்ளது. அவர்களுக்கு இந்த தொடர் உலக டுவென்டி டுவென்டிக்கு முன்னரான மைதானங்களிற்கான ஒத்திகையாக அமைந்துள்ளது. இலங்கை கிரிக்கெட் இதை யோசிக்கவில்லையா? இந்திய அணியின் பாணியில் சொல்வதென்றால் “அடிமை தானாக வந்து சிக்கி விட்டது. ஏன் விடுவான்? ஓகே போயிற்று வருவம்” என்று கிளம்பி வந்த கதை போலத்தான் இது இருக்கிறது. .jpg)
19 Nov 2025
19 Nov 2025
herry Wednesday, 01 August 2012 08:24 AM
மஹேல தலைமையில் விளையாடும் இலங்கை அணிக்கு எப்பொழுதும் வெற்றி கிடைக்க வேண்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 Nov 2025
19 Nov 2025