A.P.Mathan / 2012 செப்டெம்பர் 10 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி தொடர் நிறைவடைந்துள்ளது. எதிர்பார்க்கப்பட்டது போலவே இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை தனதாக்கியுள்ளது. தொடர் டெஸ்ட் தோல்விகள், பின்னடைவுகள், டிராவிட், லக்ஸ்மன் ஆகியோரின் ஓய்வு என்பனவற்றிக்கு பின்னர் இந்த தொடர் வெற்றியானது இந்திய அணிக்கு ஆறுதல் அழிப்பதாக இருந்தது. ஆனாலும் பலமிழந்து தடுமாறி வரும் நியூசிலாந்து அணியை இந்தியாவில் வைத்து வெற்றி பெற்றது அவ்வளவு பெரிய விடயம் இல்லை என்றாலும் அணியை மீள் கட்டி எழுப்ப இந்த வெற்றி கை கொடுக்கும். இள வயது வீரர்கள் உள்வாங்கப்படுள்ள நிலையில் அவர்கள் எல்லோரும் செய்து காட்டி இருப்பது அணிக்குள் ஏற்ப்பட்ட இடத்தை நிரப்பியுள்ளது. குறிப்பாக புஜாரா, ரெய்னா ஆகிய இருவரும் துடுப்பாட்டங்களை செய்து காட்டி அணிக்குள் நிரந்தர இடம் பிடிக்கக் கூடிய வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளனர். விராத் கோலி - டெஸ்ட் போட்டிகளில் நல்ல ஆரம்பத்தை எடுத்துள்ள போதும் இன்னும் கொஞ்சம் செய்து காட்ட வேண்டும் என்ற நிலையில் முழுமையாக தன்னை நிரூபித்து காட்டி விட்டார். பந்து வீச்சில் சுழல்ப்பந்து வீச்சாளர்கள் அஷ்வின், ஓஜா இருவரும் மிக அபாரமாக சாதித்து காட்டிவிட்டனர். இந்திய அணியின் முதன்மை சுழல்ப்பந்து வீச்சாளராக அஷ்வின் மாறிவிட்டார். உமேஷ் யாதவ் மட்டுமே இன்னும் செய்து காட்ட வேண்டும் என்ற நிலையில் தொடர்கின்றார். இந்தியாவின் வேகமான பந்து வீச்சாளர் என்ற காரணத்தினால் அவருக்கு இன்னும் கொஞ்சம் வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர் பார்க்கமுடியும். சச்சின் ஓட்டங்களை பெற தடுமாறுகிறார். அவர் ஓய்வு பெற வேண்டும் என்ற முணு முணுப்புக்கள் குறைவாக இருந்தாலும், இந்த தொடரின் பின் அதிகரிக்கத்தான் செய்கின்றன. மோசமான பெறுபேறுகளைக் காட்டிய துடுப்பாட்ட வீரர் அவரே. அடுத்த தொடர் கடைசி தொடராக இருக்கும் என பேச்சுக்கள் எழும்பினாலும், சச்சின் இப்போதைக்கு தான் ஓய்வுபெறப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago