A.P.Mathan / 2012 டிசெம்பர் 30 , மு.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இந்த இரண்டு நாடுகள் மோதும் போட்டிகளே உலகிலேயே அதிகம் விறுவிறுப்பான போட்டிகளாகவும், அதிகமானவர்கள் பார்க்கின்ற போட்டிகளாகவும் இருக்கின்றன என்பது எல்லோரும் அறிந்ததே. பாகிஸ்தான் அணி இந்தியா சென்றுள்ளது. இரண்டு 20 -20 போட்டிகளையும், 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ஏற்பாடு செய்துள்ளது. டெஸ்ட் போட்டிகளை ஏற்பாடு செய்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும். ஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையோ அதிக பணம் முயற்சியில்தான் ஈடுபடும். அப்போதுதான் அதிகமானவர்கள் பார்ப்பார்கள். அனுசரணையாளர்கள் அதிக பணம் கொடுப்பார்கள். பார்வையாளர்கள் அதிகம் வருவார்கள். பணம் நிறைய கிடைக்கும் என்பதே டெஸ்ட் போட்டிகள் அதிகம் ஏற்ப்பாடு செய்ய விரும்பாமைக்கு காரணம் என யூகிக்க முடியும். அண்மையில் மிக மோசமாக இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோற்றும் கூட பெரிய அளவில் அலட்டிக் கொள்ளவில்லை. இது ஒருநாள்ப் போட்டிகளில் நடந்தால் என்ன செய்வார்கள்? இப்படியேதான் இருந்து இருப்பார்களா? .jpg)
.jpg)
19 Nov 2025
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 Nov 2025
19 Nov 2025