Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 செப்டெம்பர் 17 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
புதுக்குடியிருப்பு பகுதியில் அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் ஒன்று நேற்றையதினம்(16) சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் நபரொருவர் கடந்த புதன்கிழமை காணாமல் போயிருந்த நிலையில் இது தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் தென்னம் காணியொன்றில் இருந்து துர்நார்ற்றம் வீசியமையால் குறித்த கிராமவாசியொருவர் சென்று பார்த்தவேளை அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் காணப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட குறித்த நபர் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதிய சேர்ந்த இராசலிங்கம் சுதர்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு நீதிமன்ற பதில் நீதிபதி எஸ்.கெங்காதரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி சுபுண் ஏக்கநாயக்க மற்றும் கிராம சேவையாளர் வே.மேகானந்தசிவம் ஆகியோர் சடலத்தை பார்வையிட்டுள்ளதுடன் தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் பரிசோதனைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டிருந்தார். தற்போது உடலம் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
52 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
58 minute ago