2024 மே 02, வியாழக்கிழமை

ஆறுமுகம் திட்டம் மீண்டும் வருகிறது

Niroshini   / 2021 ஜூலை 14 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார், சுப்பிரமணியம் பாஸ்கரன்

இரணைமடு, கல்மடு, விசுவமடு, உடையார்கட்டு போன்ற குளங்களில் இருந்து வழிந்தோடி விரயமாகின்ற நீரை பயன்படுத்தி, யாழ். மாவட்டத்துக்கான நன்னீரை பெறறுக்கொள்ளுகின்ற ஆறுமுகம் திட்டத்தை மீண்டும் செயற்படுத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில், நேற்று  (13) இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த திட்டம் தொடர்பாக 1962ஆம் ஆண்டு காலப் பகுதியில் பிரஸ்தாபிக்கப்பட்ட போதிலும்,  ஆனையிறவு கடல் நீரேரியில் பருவகால மீன்பிடிதொழிலில் ஈடுபடுவோரின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டடிருந்தது.

இந்நிலையில், குறித்த திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி, ஆனையிறவு கடல் நீரேரியில் 23 சதவீதமான பகுதியை மறித்து அணை அமைத்து, இந்தத் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக தற்போதைய அரசாங்கத்தால் பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், பிரதேச மக்கள் மற்றும் சம்மந்தப்பட்ட தரப்புக்களுக்கு, புதிய திட்டம் தொடர்பாக தெளிவுபடுத்தி,  கருத்துகளை அறிந்துகொள்ளும் வகையில், இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, நெதர்லாந்து அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் மறுசீரமைக்கப்பட்ட திட்டம் தொடர்பாக கிளிநொச்சிப் பிராந்திய பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் த.இராஜகோபு தெளிவுபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .