2025 மே 13, செவ்வாய்க்கிழமை

இராணுவ பேருந்தில் மோதி தாயும் மகளும் காயம்

Janu   / 2023 டிசெம்பர் 11 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு - சிலாவத்தை வீதியில் இராணுவ பேருந்துடன் மோதி இளம் தாயும் மகளும் படுகாயமடைந்துள்ளனர்.

இவ்விருவரும் சிலாவத்தை பகுதியில் இருந்து உந்துருளியில் ஞாயிற்றுக்கிழமை (10) இரவு  பயணித்துக் கொண்டிருந்தபோது வீதியில் நின்ற மாட்டுடன் மோதி, பயணித்துக்கொண்டிருந்த இராணுவ பேருந்துக்குள் சிக்கியுள்ளனர்.

இதன்போது படுகாயமடைந்த சிலாவத்தை பகுதியினை சேர்ந்த தாயும் சிறுமியும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், இராணுவத்தினரின் பேருந்தின் சாரதியினையும் பேருந்தையும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.

செ.கீதாஞ்சன்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X