2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

இளம் பெண்ணின் சடலம் மீட்பு

Editorial   / 2025 ஜனவரி 20 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ்.ஆர்.லெம்பேட்

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காடு புகையிரத கடவை யின் அருகில் இளம் பெண் ஒருவரின் சடலம் திங்கட்கிழமை (20) காலை அடையாளம் காணப்பட்டுள்ளது.

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி திங்கட்கிழமை (20)  அதிகாலை 4.30 மணியளவில் பயணித்த புகையிரதத்தில் குறித்த பெண் மோதி உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் மன்னார் ஜீவபுரம் பகுதியில் வசித்து வந்துள்ள நிலையில் வெள்ளம் காரணமாக தற்காலிகமாக தோட்டக் காட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த மரணம் தொடர்பாக மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X