2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

இளைஞர்கள் மீது ரவுடி கும்பல் தாக்குதல்

Freelancer   / 2023 செப்டெம்பர் 14 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் அமைந்துள்ள ஆதி விநாயகர் ஆலயத்தின் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை  (13) இரவு அலங்கார பணிகளில் ஈடுப்பட்டிருந்த இளைஞர்கள் மீது அதே கிராமத்தைச் சேர்ந்த இனந்தெரியாதோரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த நான்கு இளைஞர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான மூவர் இன்றைய தினம்(14) அவசரமாக சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள்  வைத்தியசாலையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த இனந்தெரியாதோர் குழுவினர் தொடர்ச்சியாக பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுப்பட்டு வருபவர்கள் என பி​ரதேசமக்கள் தெரிவித்துள்ள ​நிலையில் பொலிஸார் மேலதிக விசார​ணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முருகையா தமிழ்செல்வன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .